இடாநகர் : அருணாச்சலபிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு சென்ற ஹெலிகாப்டர் மாயமானது. உரிய நேரத்தில் தரையிறங்காததால் ஹெலிகாப்டர் என்னவானது என தேடி கண்டுபிடிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. எதுவும் விபத்தில் சிக்கி விட்டாரா என்ற அச்சமும், பரபரப்பும் ஏற்பட்டது. . பவன்ஹன்ஸ் தனியார் ஹெலிகாப்டர் நிறுவனத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் இன்று காலை 10 மணியளவில் தவாங்கில் இருந்து இடாநகர் நோக்கி புறப்பட்டது. காலை 11.30 மணிக்கு அங்கு வந்த சேரவேண்டிய ஹெலிகாப்டர் உரிய நேரத்திற்குள் வரவில்லை. ஹெலிகாப்டர் தவாங்கில் இருந்து புறப்பட்ட 20 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறை கண்காணிப்பில் இருந்து விலகியது. கடைசியாக தவாங் அடுத்த செலா பாஸ் பகுதியில் வந்த ஹெலிகாப்டர் ராடரில் தெரிந்தது. அதன் பிறகு 4 மணி நேரமாகியும் ஹெலிகாப்டர் இருக்கும் இடம் தெரியவில்லை. முதல்வருடன் மேலும் 2 பேர் ஹெலிகாப்டரில் இருந்தனர். ஹெலிகாப்டர் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. அருணாச்சல முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் மாயமானதை தொடர்ந்து, தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டன. தேடுதல் பணியில் ராணுவத்துக்குச் சொந்தமான 2 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. உள்துறை செயலரின் முதல்கட்ட விளக்கம்: முதல்வர் ஹெலிகாப்டர் மாயமானது குறித்து உள்துறை செயலர் ஜி.கே.,பிள்ளை கூறியதாவது: அருணாச்சலபிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு புறப்பட்டு சென்ற ஹெலிகாப்டர் எங்கே இருக்கிறது என இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. மீட்பு படையினர் ஹெலிகாப்டர் இருக்கும் இடத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வானிலை மோசமாக இருப்பதால் கொஞ்சம் சிரமம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் சென்ற இரோகாப்டர் - பி 3 ஹெலிகாப்டர் 4 முதல் 5 மாதங்களுக்குள் வாங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிலையில், 11. 30 மணி அளவில் இட்டாநகரில் தரையிறங்க வேண்டிய ஹெலிகாப்டர் , மோசமான வானிலை காரணமாக மாற்று வழியில் பூட்டானில அவசரமாக தரையிறக்கப்பட்டது என்றும் இதில் பயணித்த 5 பேரும் பத்திரமாக உள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவி்த்தாக தகவல்கள் வெளியாகின. பூடான் அதிகாரிகள் மறுப்பு: இந்நிலையில், அருணாச்சல பிரதேச முதல்வர் பயணித்த ஹெலிகாப்டர் பூடான் பகுதியில் தரையிறங்கியதாக கூறப்படுவதை அந்நாட்டு அதிகாரிகள் மறுத்துள்ளனர். தங்கள் நாட்டு பகுதியில் எந்த ஹெலிகாப்டரும் தரையிறங்கியதாக தங்களுக்கு தகவல் வரவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளதால், டோர்ஜி காண்டு நிலை என்ன என்பது புரியாத புதிராக உள்ளது. சமீபத்திய விபத்தில் 17 பேர் பலி : சமீபத்தில் அருணாச்சலில் தனியார் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்கள்ளானதில் 17 பேர் இறந்தனர். கடந்த 2009ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதியன்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி இறந்தார். இந்நிலையில் டோர்ஜீகாந்து சென்ற ஹெ லிகாப்டர் மாயமானது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
இடாநகர் : அருணாச்சலபிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு சென்ற ஹெலிகாப்டர் மாயமானது. உரிய நேரத்தில் தரையிறங்காததால் ஹெலிகாப்டர் என்னவானது என தேடி கண்டுபிடிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. எதுவும் விபத்தில் சிக்கி விட்டாரா என்ற அச்சமும், பரபரப்பும் ஏற்பட்டது. .
பவன்ஹன்ஸ் தனியார் ஹெலிகாப்டர் நிறுவனத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் இன்று காலை 10 மணியளவில் தவாங்கில் இருந்து இடாநகர் நோக்கி புறப்பட்டது. காலை 11.30 மணிக்கு அங்கு வந்த சேரவேண்டிய ஹெலிகாப்டர் உரிய நேரத்திற்குள் வரவில்லை. ஹெலிகாப்டர் தவாங்கில் இருந்து புறப்பட்ட 20 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறை கண்காணிப்பில் இருந்து விலகியது. கடைசியாக தவாங் அடுத்த செலா பாஸ் பகுதியில் வந்த ஹெலிகாப்டர் ராடரில் தெரிந்தது. அதன் பிறகு 4 மணி நேரமாகியும் ஹெலிகாப்டர் இருக்கும் இடம் தெரியவில்லை. முதல்வருடன் மேலும் 2 பேர் ஹெலிகாப்டரில் இருந்தனர். ஹெலிகாப்டர் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
அருணாச்சல முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் மாயமானதை தொடர்ந்து, தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டன. தேடுதல் பணியில் ராணுவத்துக்குச் சொந்தமான 2 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன.
உள்துறை செயலரின் முதல்கட்ட விளக்கம்: முதல்வர் ஹெலிகாப்டர் மாயமானது குறித்து உள்துறை செயலர் ஜி.கே.,பிள்ளை கூறியதாவது: அருணாச்சலபிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு புறப்பட்டு சென்ற ஹெலிகாப்டர் எங்கே இருக்கிறது என இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. மீட்பு படையினர் ஹெலிகாப்டர் இருக்கும் இடத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வானிலை மோசமாக இருப்பதால் கொஞ்சம் சிரமம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் சென்ற இரோகாப்டர் - பி 3 ஹெலிகாப்டர் 4 முதல் 5 மாதங்களுக்குள் வாங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், 11. 30 மணி அளவில் இட்டாநகரில் தரையிறங்க வேண்டிய ஹெலிகாப்டர் , மோசமான வானிலை காரணமாக மாற்று வழியில் பூட்டானில அவசரமாக தரையிறக்கப்பட்டது என்றும் இதில் பயணித்த 5 பேரும் பத்திரமாக உள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவி்த்தாக தகவல்கள் வெளியாகின.
பூடான் அதிகாரிகள் மறுப்பு: இந்நிலையில், அருணாச்சல பிரதேச முதல்வர் பயணித்த ஹெலிகாப்டர் பூடான் பகுதியில் தரையிறங்கியதாக கூறப்படுவதை அந்நாட்டு அதிகாரிகள் மறுத்துள்ளனர். தங்கள் நாட்டு பகுதியில் எந்த ஹெலிகாப்டரும் தரையிறங்கியதாக தங்களுக்கு தகவல் வரவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளதால், டோர்ஜி காண்டு நிலை என்ன என்பது புரியாத புதிராக உள்ளது.
சமீபத்திய விபத்தில் 17 பேர் பலி : சமீபத்தில் அருணாச்சலில் தனியார் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்கள்ளானதில் 17 பேர் இறந்தனர். கடந்த 2009ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதியன்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி இறந்தார். இந்நிலையில் டோர்ஜீகாந்து சென்ற ஹெ லிகாப்டர் மாயமானது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
No comments
Post a Comment