Latest News

March 10, 2011

பேஸ்புக்கின் புதிய அலுவலகம்
by admin - 0

சமூகவலைப்பின்னல் தளமான பேஸ்புக் வெவ்வேறு இடங்களில் அமைந்திருந்த சிறிய அலுவலகங்களை ஒரு வசதியான பெரிய அலுவலகமொன்றிற்கு நகர்த்தியிருந்தது.

குறித்த அலுவலகத்தின் பரப்பளவு 150,000 சதுர அடிகளாகும். இவ் அலுவலகத்தின் அலங்கார வடிவமைப்புக்களை ஸ்டூடியோ + என்ற நிறுவனமே மேற்கொண்டது.

இதற்காக அந்நிறுவனம் பேஸ்புக் ஊழியர்களிடம் கலந்துரையாடி அவர்களின் தேவைகளையும் கேட்டறிந்திருந்தது.

இங்கு ஊழியகளுக்கு இலவச உணவு, மென்பானங்கள் வழங்கப்படுகின்றது. மேலும் பல மைக்ரோ சமயலறைகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் ஊழியர்களை எந்நேரமும் புத்துணர்வுடன் வைப்பதற்காக பொழுதுபோக்கு அம்சங்கள் பலவும் இங்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.








« PREV
NEXT »

No comments