Latest News

March 11, 2011

19 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை
by admin - 0

டோக்கியோ : ஜப்பானை தொடர்ந்து இந்தோனேஷியா, தைவான், பெரு, சிலி, நியூசிலாந்து, ஹவாய், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 19 நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு இந்தோனேஷியாவையும், இரவு 10.50 மணிக்கு நியூசிலாந்தையும், சிலி நாட்டை மாலை 6 மணிக்கும், இரவு 11.05 மணிக்கு ஆஸ்திரேலியாவையும் சுனாமி அலைகள் தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பு கொள்ள முடியாததால் அந்நாட்டில் வாழும் 25 ஆயிரம் இந்தியர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை.

« PREV
NEXT »

No comments