Latest News

October 10, 2010

பேஸ்புக், ட்விட்டரில் அரட்டை அடிப்பவர்கள் வீட்டிற்கு போய்விடலாம் - பிரிட்டன் அரசு நிறுவனங்கள் எச்சரிக்கை
by admin - 0

பணி நேரங்களில் பேஸ்புக், ட்விட்டர் ஆகிய சமூக வலைத்தளங்களில் அரட்டை அடித்துக் கொண்டிருப்பவர்கள் மேல் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவர் என்ற சுற்றறிக்கை 2012 ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளோர் உட்பட பிரித்தானிய அரசு நிறுவனங்கள் அனைத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த வருடம் போலீசார் எட்டு பேர் காவல்துறை அலுவலகத்தில் இருந்த கணினிகளை பயன்படுத்தி பணி நேரங்களில் தங்கள் பேஸ்புக், ட்விட்டர் நண்பர்களுடன் அரட்டை அடித்து வந்துள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டு தீவிர தடை விதிக்கப்பட்ட பின்னர் தற்போதும் அரசு மற்றும் நகராட்சிப் பணிகளில் ஈடுபட்டுள்ளோர் பலர் சில மென்பொருட்களின் உதவியால் மறைமுகமாக சமூக வலைதளங்களில் தாங்கள் அரட்டை அடிப்பது பிறருக்குத் தெரியாத வண்ணம் தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளது அம்பலமாகியுள்ளது.

ஏற்கனவே அரசு செலவீனக் குறைப்புக்களை அமல்படுத்தும் போது பலருக்கு வேலை இழப்புக்கள் ஏற்படலாம் என்ற நிலை உள்ள போது இது போன்று செயல்படும் பணியாளர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்து வீட்டிற்கு அனுப்பப்படுவது உறுதி என அரசுப் பணியாளர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

« PREV
NEXT »

No comments