Latest News

October 09, 2010

மண்பானை செடித்தைலம்
by admin - 0

"மண்பானை செடித் தைலம்' செடிகள் வளர்ச்சிக்கு தேவையான சத்தினை தருவதுடன் பூச்சி விரட்டியாகவும் செயல்படுகிறது.

இந்த தைலத்தை தயாரிக்க தேவையானவை: வேம்பு, எருக்கு, நொச்சி ஆகியவை சுமார் 50 கிராம் பொடி செய்த பயறுவகைகள் (ஏதேனும் ஒரு பயறு), 1 லிட்டர் தயிர் அல்லது அடர்த்தியான மோர், 1.5 லிட்டர் தண்ணீர் ஆகியவையாகும். முதலில் இலைகளை நன்கு அரைத்து கூழாக்கிக் கொள்ளவும். அதை அரைத்து வைத்துள்ள பயிர் பொடியுடன் கலக்கவும். பின் தயிர் மற்றும் தண்ணீருடன் இவ்விழுதை நன்கு கலக்கவும். இதை ஒரு மண் பானையில் வைத்து, அதன் வாயை ஒரு துணியைக் கொண்டு மூடிவிட வேண்டும். பின், ஒவ்வொரு நாளும் இதை இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் கலக்க வேண்டும். இவ்வாறு 15-20 நாட்களுக்கு பிறகு, இந்த தைலத்தினை பயன்படுத்தலாம். ஒரு ஏக்கர் நிலத்திற்கு இந்த தைலத்தினை 20 லிட்டர் தண்ணீரில் கரைத்து, இலைகளின் மீது தெளிக்க வேண்டும். இதனை தெளிக்கும் நேரம் மிக முக்கியமானது. அதிகாலை நேரத்திலும், அந்தி சாயும் மாலையிலும் இதை தெளிக்க சிறந்ததாகும். இதை தெளிப்பதன் மூலம் பல பூச்சிகள் கட்டுப்படுத்தப்பட்டு, செடிக்கு நல்ல ஊட்டச்சத்து தருவதுடன் பயிர் வளர்ச்சியையும் அளிக்கிறது
« PREV
NEXT »

No comments