பிரிட்டன் மக்களின் நலன்களுக்காக குடிவரத்துக்களில் அரசு ஏற்படுத்தியுள்ள மாற்றங்களால் பிரிட்டன் தொழிற்துறைக்கு மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது என பிரிட்டன் தொழில் வர்த்தக சங்கம் அறிவித்துள்ளதோடு உடனடியாக இந்த விதிமுறைகளை தளர்த்திக் கொள்ளாவிட்டால் பல தொழில்கள் பிரித்தானியாவை விட்டுப் போய் விடும் எனவும் எச்சரித்துள்ளனர்.
உலகில் உள்ள மற்ற நாடுகளுடன் தொழில் ரீதியான போட்டியையோ , சவாலகளையோ சந்திக்க விரும்பினால் அதற்குத் தகுந்த திறமை உடையவர்களை பணியில் அமர்த்துவது அவசியம் என்பதையும் இந்த அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.
எடுத்துக்காட்டாக சட்ட ரீதியான நிறுவனங்களின் திறமையான செயல்பாட்டிற்கு அமெரிக்கா, மற்றும் ஜப்பான் நாட்டினரின் உதவி பெரிதும் தேவைப்படுகிறது என்பதையும் கூறியுள்ளது.
இதில் அரசு தடைகளை ஏற்படுத்தினால் பிரிட்டனில் சேவை சார்ந்த தொழில்கள் எதையும் செய்ய இயலாத நிலையே உருவாகும் என்பதையும் தொழிற்துறையினர் வலியுறுத்தி வருவதால் அரசு இதில் கவனம் செலுத்தி தொழில்நுட்பத் துறையினரின் மீது விதிக்கப்பட்டுள்ள குடிவரத்து கட்டுப்பாடுகளை நீக்க வேண்டுமென தொழில் மற்றும் வர்த்தக துறைக்கான அமைச்சர் மார்க் பிரிஸ்க் ஆலோசனை வழங்கியுள்ளார்.
No comments
Post a Comment