Latest News

March 10, 2020

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான யாழ்.தமிழ்க் குடும்பம்
by Editor - 0

பிரித்தானியாவில் பருத்தித்துறையைச் சேர்ந்த தமிழ் குடும்பம் ஒன்று கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

Southall நகரில் வசிக்கும் யாழ். பருத்தித்துறைப் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒரு டாக்ஸ்சி சாரதி தனக்கு இருமல் மற்றும் காய்ச்சல் இருப்பதாக கூறி 111 க்கு அழைத்துள்ளார். அவரை உடனே வைத்தியசாலைக்கு வருமாறு சுகாதார அதிகாரிகள் அழைத்துள்ளார்கள். வைத்தியசாலைக்கு சென்று பலமணி நேரம் காத்திருந்த பின்னரே அவரை வைத்தியர்கள் பரிசோதித்தனர். அதன்பின்னர் டாக்ஸ்சி சாரதிக்கு கொரோனா வைரஸ் இருப்பதை உறுதி செய்துள்ளார்கள்.

இதேவேளை அவர் கடைசியாக ஏற்றி இறக்கிய பயணி யார் என்று பொலிசார் விசாரித்ததன் பின்னர் குடும்பத்தில் தந்தைக்கு Corona தொற்று இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

யாழ். பருத்தித்துறையைச் சேர்ந்த கணவனுக்கு கொரொனா தொற்று உறுதியானதன் பின்னர், மனைவிக்கும் 3 நாட்கள் காய்ச்சலின் பின்னர் கொரொனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்பின்னர் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் மகன், மகள் தொடர்பில் தகவல்கள் எதுவும் கிடைக்காத நிலையில் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்திய போதிலும் அவர்களுடனான தொடர்பு கிடைக்கவில்லை என நெருங்கிய நட்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். 321 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


« PREV
NEXT »

No comments