Latest News

July 24, 2019

"கறுப்பு யூலை" தமிழினவழிப்பின் 36ஆம் ஆண்டினை நினைவு கூரி லண்டனில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம்.!
by admin - 0

"கறுப்பு யூலை" தமிழினவழிப்பின் 36ஆம் ஆண்டினை நினைவு கூரி லண்டனில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம்.!


யாழ் திருநெல்வேலியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது பாரிய தாக்குதலின் போது 13 இலங்கை படையினர் கொல்லப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாத இனவெறி சிங்கள அரசு பெருமெடுப்பிலான இனக்கலவரத்தை கட்டவிழ்த்து விட்டது. இலங்கைத் தீவின் பல பாகங்களிலும் இலங்கை அரசின் கைக்கூலிகளினாலும், படையினரினாலும் தமிழர்கள் அழிக்கப்பட்டனர். 1983ஆம் ஆண்டு யூலை மாதம் 23ஆம் திகதி தொடக்கம் 10 நாட்களுக்கு மேலாக இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிராக திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பே "கறுப்பு யூலை" ஆகும். இக் கொடூர சம்பவத்தில் 3,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்டும், பல பெறுமதியான சொத்துக்களும் அழிக்கப்பட்டன. இக் கரிய நாளை நினைவு கூரும் முகமாக 23/07/2019 அன்று பிரித்தானியப் பிரதமரின் அலுவலகத்திற்கு முன்பாக (10 Downing Street) கவனயீர்ப்புப் போராட்டம் மாலை 5 மணி முதல் 7 மணி வரை நடைபெற்றது.
« PREV
NEXT »

No comments