Latest News

July 27, 2018

பிரித்தானியா-பிரான்ஸ்-ஜேர்மனி இன்று அபாயநாள்!
by admin - 0

பிரித்தானியா- பிரான்ஸ் -ஜேர்மனி ஆகிய நாடுகள் உட்பட்ட மேற்குலக நாடுகளுக்கு இன்று காலநிலையை பொறுத்தவரை பெரும் சவாலான ஒரு நாளாக கடக்கப்போகிறது.

கடந்த செவ்வாய்கிழமை முதல் கடுமையான வெப்பநிலை தாக்கிவரும் நிலையில் இன்று பல இடங்களில் 18 ஆண்டுகளுக்குப்பின்னர் அதிஉச்ச வெப்பநிலைபதிவாகலாம் என எதிர்பார்கப்படுகிறது.

பிரித்தானியா மற்றும் பிரான்சில் இன்று கடும் வெப்பநிலை நிலவும் அதேநேரம் சில இடங்களில் கடுமையான இடிமின்னல் தாக்கம் மற்றும் தீவிர பனிக்கல்மழை பொழிவு இருக்கும் என்பதால் இன்றைய நாள் ஒரு உலைக்கள நாளாக அமையும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ரீதியில் இன்று பிரித்தானியாதான் அதிக வெப்பநிலை பதிவாகும் நாடாக மாறக்கூடும். எனினும் கடுமையான இடிமின்னலுடன் மழைபொழிந்தால் வெப்பநிலை கொஞ்சம் குறைவடையும் எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு இங்கிலாந்திலும் வட பிரான்சிலும் கடுமையான இடிமின்னல் தாக்கம் இருக்கும் என இரண்டு நாடுகளின் காலநிலை அவதான நிலையங்களும் அறிவித்துள்ளன.

பிரான்சில் பரிஸ் உட்பட 18 பிராந்தியங்களுக்கு இன்று செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வெப்பநிலை தொடர்ந்தும் உயர்வடைந்த காரணத்தால் பெரும் போக்குவரத்து நெருக்கடிகளும் உருவாகியுள்ளன. பிரித்தானியாவுக்கும் பிரான்சுக்கும் இடையிலான ஈரோ ஸ்ரார் தொடருந்து சேவைகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளன.

கடும்வெப்பம் காரணமாக ஈரோஸ்டார் தொடருந்து வண்டிகளின் குளிர்சாதன கருவிகள் செயல்இழந்ததால் நேற்றும் இன்றும் சேவைகள் பாதிப்படைந்தன. நூற்றுக்கணக்காக பயணிகள் தமது பயணங்களை மீளெடுத்துள்ளனர்.

ஐர்மனியில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக அங்;கும் கடும் பாதிப்புகளும் நெருக்கடிகளும் நிலவிவருகின்றது. நேற்று கொலோன் நகரில் 37 பாகை வெப்ப நிலை பதிவானது. ரைன் நதியூடான மேற்கொளப்படும் சரக்கு கப்பற்சேவை அரைவாசியாக குறைக்கபட்டுள்ளது. கடும் வெப்பம் காரணமாக விமான ஓடுபாதைகள் விரிசலடைந்ததால் சில விமான நிலையங்களில் சேவைகள் பாதிக்கப்பட்டது.

சுவிஸில் காட்டு;த்தீ அச்சம் காரணமாக பொது இடங்களில் வாணவேடிக்களை நடத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால் எதிர்வரும் முதலாம் திகதி தேசிய விடுமுறையை முன்னிட்டு நடத்தப்படவிருந்த பாரம்பரிய வாணவேடிக்கை நிகழ்வும் மீளெடுக்கப்பட்டுள்ளது.

1921 ஆம் ஆண்டுக்குப்பின்னர் சுவிசில் மிக குறைந்த மழைவீழ்ச்சி பதிவு செய்யப்பட்ட ஆண்டாக இந்த ஆண்டு மாறியுள்ளது.

இன்றையநாளில் முன்னெச்சரிக்கை மற்றும் அவதானமாக இருக்கும் படி மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
« PREV
NEXT »

No comments