14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.
கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப் புலிகளின் 14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் திருப்புமுனையினை ஏற்படுத்திய கட்டுநாயக்க வான்படைத்தளம் மீது தரை கரும்புலிகள் சென்று தாக்குதல் நடத்தி வீர வரலாறு படைத்து, விடுதலை போராட்டத்திற்கு திருப்ப முனையினை ஏற்படுத்திய தாக்குதலின் 17ம் ஆண்டு நினைவு நாள்.
இந்த தாக்குதல் சம்பவத்தினை இன்றைய நாளில் நினைவிற் கொண்டு வீரச்சாவடைந்த கரும்புலி மாவீரர்களுக்கு வீரவணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றோம்.தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் தமிழர்களின் வரலாற்றில் ஒவ்வொரு தாக்குதல் சம்பவங்களையும் வெற்றி தாக்குதல்களையும் நினைவிற் கொண்டு எமது அடுத்த தலைமுறைக்கு விடுதலைப் புலிகளின் வீரத்தினையும் வரலாற்றினையும் எடுத்து செல்ல வேண்டிய தேவை இன்று இனப்பற்றுள்ள ஒவ்வொரு தமிழருக்கும் உண்டு என்பதை மறந்து விடக்கூடாது.கட்டுநாயக்கவில் குண்டுகளை ஏற்றி தமிழர் வாழ் இடங்கள் மீது வீசி தமிழின அழிப்பினை மேற்கொண்ட சிங்களத்தின் வான் கழுகுகளை அவர்கள் வாழ்கின்ற குகைக்கு சென்று அழித்த எங்கள் கரும்புலி மறவர்களின் வீரத்தினை அவர்களின் வரலாற்றினை இன்று நினைவிற்கொள்கின்றோம்.தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் மதிநுட்பத்தின் வெளிப்பாடாக இந்த கட்டுநாயக்க வான்படைத் தளத்தினை தகர்த்து சிறீலங்கா அரசிற்கும் படையினருக்கும் பாரிய இழப்பினை கொடுத்தார்கள்.கட்டுநாயக்க தாக்குதலில் சிறீலங்கா அரசின் விமானங்கள் 28 அழிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் பல விமானங்கள் சேதமாக்கப்பட்டுள்ளது.
நடத்தப்பட்ட இத்தாக்குதலானது சிறீலங்காவின் பொருளாதாரத்தில் வரலாறு காணாத மாற்றத்தை ஏற்படுத்தியது.இத்தாக்குதலின் மூலம் சுமார் 375 மில்லியன் அமெரிக்க டொலர்களிற்கும் அதிகமான சொத்துக்கள் அழிக்கப்பட்டது.முகம் தெரியாத, முகவரி தெரியாத நிழற்கரும்புலிகளின் நினைவுளை நெஞ்சில் சுமந்து வணங்குகின்றோம் மாவீரர்களை.
-ஈழம் ரஞ்சன்-
No comments
Post a Comment