Latest News

November 10, 2017

மைத்திரி - ரணில் ஆட்சியிலும் சித்திரவதைகள் தொடர்கின்றன சர்வதேச ஊடகம் வெளிப்படுத்தல்
by admin - 0

இலங்கையில் போர் முடிவுக்கு வந்து எட்டு ஆண்டுகளுக்குப் பின் னரும், தமிழர்கள் தாக்கி சித்திர வதை செய்யப்படுவதும், பாலியல் கொடுமைப்படுத்தப்படுவதும் தொட ர்வதாக, சர்வதேச ஊடகமான அசோசியேட்டட் பிரஸ் செய்தி தெரி வித்துள்ளது.
ஐரோப்பாவில் அரசியல் தஞ் சம் கோரியுள்ள 50 இற்கும் அதிக மான இலங்கைத் தமிழ் ஆண்கள் தாம் தற்போதைய அரசின் காலத் தில் கடத்தப்பட்டு சித்திரவதைக்குட் படுத்தப்பட்டது தொடர்பான விவர ங்களை அசோசியேட்டட் பிரசிடம் வெளிப்படுத்தியுள்ளனர்.

அவர்கள் ஒவ்வொருவராக தமது கதைகளை கூற இணங் கினர். அவர்களின் மார்பு, இடுப்பு, கால்க ளில் வடுக்கள் காணப்பட்டன. அசோசியே ட்டட் பிரஸ், 32 மருத்துவ மற்றும் உளவி யல் மதிப்பீடுகளை ஆய்வு செய்ததுடன், 20 பேரை நேர்காணல் செய்தது.
உள்நாட்டுப் போரில் தோல்வியடைந்த தரப்பில் ஒரு போராளிக் குழுவை மீண்டும் உருவாக்க முயற்சிப்பதாக தம்மீது குற்றம் சாட்டப்பட்டதாக அவர்கள் கூறினர்.
8 ஆண்டுகளுக்கு முன் போர் முடிவுக்கு வந்த போதிலும், 2016 தொடக்கத்தில் இரு ந்து இந்த ஆண்டின் ஜூலை வரை சித்திரவ தைகளும் மீறல்களும் இடம்பெற்றுள்ளன. எனினும் அரச அதிகாரிகள் இந்தக் குற்றச் சாட்டுகளை நிராகரித்தனர்.
கடந்த 40 ஆண்டுகளாக உலகில் மோச மான நாடுகளில் சித்திரவதைகளில் இருந்து தப்பி வந்தவர்களை நேர்காணல் செய்த பியர்ஸ் பிகோ என்ற தென்னாபிரிக்க மனித உரிமைகள் விசாரணையாளர்,தாம் இதற்கு முன்னர் கேள்விப்பட்டிராத மிருகத்தனமான சித்திரவதைகள் இடம்பெற்றிருப்பதாக கூறு கிறார்.

இலங்கை அதிகாரிகளின் பாலியல் மீற ல்கள் நிலைத்திருப்பது மிகவும் அதிர்ச்சியா கவும், இதற்கு முன்னர் பார்த்திராததாகவும் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பெரும்பாலான ஆண்கள் கண்கள் கட்ட ப்பட்ட நிலையில், தடுப்பு முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறினர். தம்மை சிறைபிடித்தவர்கள் பெரும்பாலானோர் குற் றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளப்படுத்தியதாக அவர்கள் தெரிவி த்தனர்.

சிலர், தம்மைக் கைது செய்து விசாரித்த வர்கள் படையினரும் என்று, அவர்கள் அணிந்திருந்த சீருடைகள் மற்றும் முத்தி ரைப் பட்டிகளின் அடிப்படையில் கூறுகின் றனர். ஒருவர், உடைகளுடன் இராணுவ சீருடைகளும் தொங்கியதாகவும், பலர் இரா ணுவ சப்பாத்துகளை அணிந்திருந்தனர் என்றும் கூறியுள்ளார்.
எனினும், கடந்தவாரம் கொழும்பில் செவ்வி ஒன்றை அளித்த இராணுவத் தள பதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, சித்திரவதைக் குற்றச்சாட்டுகளை நிராகரித் தார்.
இராணுவம் தொடர்புபடவில்லை. இந்த விடயத்தைப் பொறுத்தவரையில், பொலி ஸாரும் தொடர்புபடவில்லை என்று என்னால் உறுதியாக கூற முடியும். இப்போது அத னைச் செய்வதற்கு எமக்கு எந்தக் காரண மும் இல்லை என்றும் அவர் கூறினார்.

பொலிஸ் திணைக்களத்துக்குப் பொறுப் பான அமைச்சர் சாகல, சித்திரவதைகளை கடந்த மாதம் ஒப்புக்கொண்டார். எனினும் அதனை அவர் பின்பற்றவில்லை.

இலங்கையில் பரந்தளவிலான சித்திரவ தைகள் இன்னமும் அதன் பாதுகாப்புப் படை களால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் மறுக்கப்பட்டா லும், 26 ஆண்டுகால உள்நாட்டு போரில், வெளிவந்த போர்க்குற்றச்சாட்டுக்களை விசா ரணை செய்வதில் இலங்கை தோல்விய டைந்துள்ளது.

சித்திரவதை செய்யப்பட்ட 52 ஆண்கள் பற்றிய அசோசியேட்டட் பிரசின் கணக்கு குறித்து ஐ.நா மனித உரிமை ஆணை யாளர் செயிட் ராட் அல் øசேன், கரிசனை கொண்டுள்ளார்.
ஐ.நா விசாரணையை முன்னெடுக்கும் வரை இதனை உறுதிப்படுத்த முடியவில்லை என்றாலும், தெளிவான இந்த அறிக்கைகள் கொடூரமானவையாக இருப்பதுடன், 2016- 2017 காலப்பகுதியில் இவை நடந்திருந்தால் எமது பக்கம் மிகவும் நெருக்கமாக ஆய்வு செய்யப்பட வேண்டியதாகவும் இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
தமது அடையாளங்களை வெளிப்படுத்தா மல் பாதுகாப்பதாக உறுதியளிக்கப்பட்ட பின் னர் தான் இவர்கள் தமது கதைகளை கூற இணங்கினர். தாயகத்தில் உள்ள தமது உற வினர்கள் பழிவாங்கப்படலாம் என்று அவர் கள் அஞ்சுகின்றனர் என்று அசோசியட்டட் பிரஸ் கூறுகின்றது. 
« PREV
NEXT »

No comments