Latest News

November 30, 2017

முன்னாள் போராளி குடும்பத்திடம் புலனாய்வு பிரிவு தீவிர விசாரணை
by admin - 0

முன்னாள் போராளி குடும்பத்திடம் புலனாய்வு பிரிவு தீவிர விசாரணை.


     தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு  ஆதரவு நல்கிய குடும்பங்களிடம் புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
                           


இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது குகபாலன் லோகேசன் என்பவர் 2006 தொடக்கம் 2008 வரையான காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்துள்ளார். இவரின் மூத்த சகோதரன் குகபாலன் திலீபாகரன் என்பவர் விடுதலைப்புலிகளின் முக்கியமான ஒரு தளபதியாக இருந்து யுத்தகாலத்தில் இராணுவத்தினரால் சுட்டு கொல்ல பட்டார் என கூற படுகிறது. 

இதன் தொடர்ச்சியாக யுத்தம் மௌனித்த காலப்பகுதியில் 22.08.2013  காலப்பகுதிகளில் விடுதலைப்புலிகளை மீள உருவாக்கும்  நோக்குடனும் சிங்கள அரசியல் தலைவர்களை கொலை செய்யும் நோக்குடனும் தனது  Hirce  ரகசிய வாகனத்தில் இரண்டு கைத் துப்பாக்கிகளும் இருபது தோட்டாக்களும் வைத்திருந்ததாகவும் வவுனியா குற்றப்புலனாய்வுத் துறையினரால் கைதுசெய்யப்பட்டார். 

விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டார். தற்போது இவர் பிரித்தானியாவில் வாழ்ந்து வருவதாகவும் அங்கு விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு ஆதரவாக தீவிரமாகசெயற்பாட்டு வருகின்றார் எனவும் கூறி புலனாய்வு பிரிவினர் அடிக்கடி அவரது வீட்டிற்குச் சென்று தகவல்கள் சேகரித்து வருகின்றனர். 
   
                   
 அத்துடன் பெற்றோரை தாம் அழைக்கும் போதெல்லாம் மேலதிகாரி விசாரணைக்கு சமூகமளிக்குமாறு கோரியுள்ளனர். இலங்கையில் நல்லாட்சி நிலவுகின்ற நிலையிலும் முன்னாள் போராளிகள் பலர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 
பலர் காணாமல் போயுமுள்ளனர். அத்துடன் முன்னாள் போராளி குடும்பங்களிற்கு தொந்தரவுகளும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இச் சம்பவங்கள் தொடர்பாக ஐ.நா சபையில் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.
« PREV
NEXT »

No comments