Latest News

September 03, 2017

பிரித்தானிய கடற்கரையில் தொடர்கின்றது மக்களுடனான நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் -BOURNEMOUTH AIR FESTIVAL
by admin - 0

பிரித்தானிய கடற்கரையில் தொடர்கின்றது மக்களுடனான நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் 
(BOURNEMOUTH AIR FESTIVAL)


பிரித்தானியாவில்  போன்மோத் (Undercliff Bournemouth) கடற்கரையில் ஒவ்வொரு வருடமும் நடைபெறுகின்ற Air festival இவ்வருடமும் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றது.




இந்த நிகழ்விலே தாயகத்தில் இலங்கை அரசாங்கத்தினால் தமிழ்மக்களுக்கு திட்டமிட்டு இழைக்கப்பட்ட இன அழிப்பு தொடர்பாக இங்கு வாழ்கின்ற பிரித்தானியா வாழ் வேற்றின மக்களுக்கு எடுத்துக் கூறும் முகமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் இனவழிப்பு  தொடர்பான புத்தகங்கள், துண்டு பிரசுரங்கள், பனர்கள் மற்றும் புகைப்படங்களையும்  காட்ச்சிப்பபடுத்தி அதனூடாக  வழிப்புணர்வை ஏற்படுத்தி நீதி கோரும் செயற் திட்டத்துடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கான நிதி சேகரிப்புக்கான வர்த்தக நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. 










31.08.2017 தொடக்கம் 03.09.2017 வரை நான்கு நாட்கள் நடைபெறும் இந்நிகழ்வில் நிதி சேகரிப்பு நடவடிக்கைகளும் நடைபெற்று வருகிறது. பிரித்தானியா வாழ் மக்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் குறிப்பாக ஐரோப்பாவிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments