Latest News

September 04, 2017

சுவிட்சர்லாந்து பேர்ண் பாராளுமன்ற முன்றலில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான கவனயீர்ப்பு போராட்டம் 

 T
by admin - 0

சுவிட்சர்லாந்து பேர்ண் பாராளுமன்ற முன்றலில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான கவனயீர்ப்பு போராட்டம் 

பல நூற்றுக்கணக்கான உறவுகளின் கண்ணீருடன் சர்வதேசத்திடம் நீதிக்கான  கோரிக்கை முன்வைக்கப்பட்டது.








வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான கடந்த புதன் கிழமை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத்தேடும்  உறவினர்களும் மனித உரிமை அமைப்புக்களும்  சுவிஸ்சர்லாந்து தமிழர் ஒழுங்கமைப்பு  குழு ஆகியவை இணைந்து சுவிட்சர்லாந்து பேர்ண்  பாராளுமன்ற முன்றலில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.



கடந்த புதன் கிழமை மாலை 2-00 மணியளவில்  சுவிட்சர்லாந்தை தளமாக கொண்டு இயங்கும் மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர், தமிழ் உணர்வாளர்கள் பொது மக்கள் என பல நூற்றுக்கணக்கான பேர்  பாராளுமன்ற முன்றலில்  கவனயீர்ப்பு ஆர்ப்பட்டத்தை மேற்கொண்டனர்.








கறுப்பு  கொடிகளை கைகளில் ஏந்தியவாறும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் புகைப்படங்களை ஏந்தியவாறும் நல்லாட்சி அரசு என்று கூறப்படும் அரசே எமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே ? 

நல்லாட்சி அரசே சர்வதேசத்தை ஏமற்றதே , 

எங்கே எங்கே எங்கள் உறவுகள் எங்கே ? 

குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் அரசே எமது உறவுகள் எங்கே , ?

எங்களுக்கு எங்கள் உறவுகள் வேண்டும் ?

போன்ற பல கோஷ்டங்கள் எழுப்பப்பட்டது பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் கவனயீர்ப்பு போராட்டத்தில் மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.



வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவினர்களினால் அமைதி போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

அதனை தொடர்ந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக நாடகம் ஒன்றும் அரக்கேற்றப்பட்டது எவ்வாறு கடந்தகாலங்களிலும் தற்போதும்  ஸ்ரீ லங்காவில் குடும்பத்தர்கள் இளைஞர்கள் ,மாணவர்கள் ,யுவதிகள் இராணுவம் மற்றும் ஒட்டுக்குழு போன்றவற்றினால் கடந்தப்படுவதும் அதன் பின்னர் அந்த குடும்பங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் நாடகம்  ஊடக தெளிவு படுத்தப்பட்டது.


 அம்பறை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் 1989 ம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை இராணுவம் ,கருணா குழு போன்றவற்றினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குழும்பத்தலைவி ஒருவர் தமது வேதனைகளை தெரிவித்தார்.

இதில் கணவர் ,பிள்ளைகள் ,சகோதரர்கள் ,சகோதரிகள் அடங்குகின்றார்கள்.

தற்போது சுவிசர்லாந்து நாட்டில் வாழ்ந்துவரும் குறித்த பெண்  தனது உறவுகளை மீட்க தொடர்ந்து பல வழிகளிலும் போராடி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

 
2007 ம் ஆண்டு மெனரகல  வெல்லவாய பிரதேசத்தில் வைத்து இராணுவம் மற்றும் கருணா குழுவினால் கடந்தப்பட்டு மிக மோசமாக சித்தரவதை செய்யப்பட்டு மூன்று மாதங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன் கருத்து தெரிவித்தார்.

தனது சகோதரன் சிவஞானம் பார்த்தீபன் 2008-08-21 அன்று வெல்லவாய பகுதியில் வர்த்தக நிலையத்தில் பணியற்றும் இராணுவம் மற்றும் புத்தல பொலிஸரினால் கைது செய்யப்படு காணாமல் ஆக்கப்பட்டர்  இதுவரை அவர் தொடர்பான எந்த தகவல்களும் இன்றி கடந்த  9 வருடங்களாக பல போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.

இதனால் தனது தாய் மிக மோசமாக பாதிக்கப்படுள்ளார் என்றும் இலங்கை முதல் ஐ -நா -சபை வரை பல  சாட்சிகள் பதிவு செய்துள்ளோம் ஆனால் இது வரை எந்த தரப்பும் எமக்கு உரிய பதில் தரவில்லை நல்லாட்சி என்று கூறும் அரசங்கம் இராணுவ அதிகாரிகள் கருணா குழு   ஈ -பி -டி -பி போன்ற உறவினர்களினால் அவர்களுக்கு எதிராக சாட்சியம் அளிக்கப்பட்ட போதும் இதுவரை ஒருவர் கூட கைது செய்து விசாரிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

ஐ- நா -சபை ,சர்வதேச நாடுகள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் தலையீடு செய்யும் போதுதான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும்.

காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களுக்கு தொடர்ந்து இராணுவப் புலனாய்வு பிரிவினால் கண்கணிக்கப்பட்டு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது குறிப்பாக கணவர் காணாமல் ஆக்கப்பட்ட பல குடும்பங்களுக்கு பாலியல் தொத்தரவு இரகசிய விசாரனை அச்சுறுத்தல்  என்று இன்றும் தொடர்ந்து வருகின்றது என்று குறிப்பிட்டார். 

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பல குடும்பங்கள் கவனயீர்பு போராட்டத்துக்கு வந்தபோதும் இராணுவத்தின் ஊடக தாயகத்தில் உள்ள தமது குடும்பங்களுக்கு உயிர் அச்சறுத்தல் விடுக்கபடும் என்ற காரணத்தினால் கருத்து தெரிவிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது ,
« PREV
NEXT »

No comments