Latest News

September 09, 2017

வவுனியா வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீதான தாக்குதலில் காவியமான 10 கரும்புலி மாவீரர்களின் 9ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
by admin - 0

வவுனியா வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீதான தாக்குதலில் காவியமான 10 கரும்புலி மாவீரர்களின் 9ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
மாவீரர்கள்

வவுனியாவில் அமைந்துள்ள வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீதும், அங்கு பொருத்தப்பட்டிருந்த வானூர்தி கண்காணிப்பு கருவி (விமான ராடர்) மீதும் 09.09.2008 அன்று மேற்கொள்ளப்பட்ட விடுதலைப் புலிகளின் மும்முனை அதிரடித் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட கரும்புலி லெப்.கேணல் வினோதன், கரும்புலி லெப்.கேணல் மதியழகி, கரும்புலி மேஜர் நிலாகரன், கரும்புலி மேஜர் ஆனந்தி, கரும்புலி கப்டன் எழிலகன், கரும்புலி கப்டன் கனிமதி, கரும்புலி கப்டன் நிமலன், கரும்புலி கப்டன் அறிவுத்தமிழ், கரும்புலி கப்டன் அகிலன், கரும்புலி கப்டன் முத்துநகை ஆகிய கரும்புலி மாவீரர்களின் 9ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.


தமிழீழம்

வான் புலிகள் மற்றும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணி ஆகியவற்றின் துணையுடன் 09.09.2008 அன்று இப்பத்து கரும்புலி வீரர்களும் வவுனியாவில் அமைந்துள்ள வன்னி கூட்டுப்படைத் தலைமையகத்திற்குள் ஊடுருவி சிறிலங்கா படையினருக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத் தாக்குதலில் சிறப்பாக செயற்பட்ட படையணிப் தளபதிகளும், பொறுப்பாளரும், போராளிகளும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் பாராட்டுப் பெற்று பல விருதுகள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஈழம் ரஞ்சன் 



« PREV
NEXT »

No comments