Latest News

March 09, 2017

சுமந்திரன் வருவதில்லை – முடங்கும் படுகொலை விசாரணை
by admin - 0

 

துப்பாக்கிச் சூடு நடத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மரணமடைந்த சம்பவம்ன் தொடர்பான வழக்கு விசாரணைகளிற்கு சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன்,மற்றும் சயந்தன் ஆகிய இருவரும் ஆஜராகாது இருந்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்கலைக்கழக மாணவர்களது மரணத்திற்கு நீதி கோரி போராட தாமாகவே பல சட்டத்தரணிகள் முனவந்திருந்த நிலையினில் அவர்களை புறந்தள்ளி சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன்,மற்றும் சயந்தன் ஆகிய இருவரும் மூக்கை நுழைத்திருந்தனர்.அத்துடன் பாதிக்கப்பட்ட மாணவர்களது குடும்பங்களை முன்னிறுத்தி விளம்பரமும்ரு தேடிக்கொண்டன.

இந்நிலையினில் கிளிநொச்சியிலுள்ள மாணவன் ஒருவனது குடும்பத்திற்கு முல்லைதீவு காவல்துறை அத்தியட்சகர் வழக்கிலிருந்து விலகிக்கொள்ளுமாறு மிரட்டியுமிருந்ததார்.

இதனிடையே விசாரணைகளிற்கு இலங்கை காவல்துறை ஒத்துழைக்க மறுத்துவருகின்ற நிலையினில் விசாரணை முடக்க நிலையை அண்மித்துள்ளது.

இதனிடையே மரணத்துக்குக் காரணமானவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள, ஐந்து சிறிலங்கா காவல்துறையினரும், தம் மீதான வழக்கை வடக்கு- கிழக்கிற்கு வெளியே மாற்றக் கோரி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு மீதான விசாரணையின் தீர்ப்பு அளிக்கப்படும் வரையில்,யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் நடந்து வரும் தமது வழக்கின் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்குமாறும் இவர்கள் கோரியுள்ளனர்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ள மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் விஜித் மலல்கொட, துரைராஜா ஆகியோரைக் கொண்ட அமர்வு, அரசதரப்புக்குப் பதிலளிப்பதற்கு ஏப்ரல் 6ஆம் நாள் வரை காலஅவகாசம் வழங்கியுள்ளது.

விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகிய யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த 2016 ஒக்ரோபர் 20ஆம் நாள் கொக்குவிலில் சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டினாலும் அதனால் ஏற்பட்ட விபத்தினாலும் மரணமடைந்தனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து சிறிலங்கா காவல்துறையினருமே தமது வழக்கு விசாரணையை வடக்கு கிழக்கிற்கு வெளியே உள்ள நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு கோரியுள்ளனர்.

தற்போது அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தம்மை யாழ். நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைக்கு தொடர்ந்து கொண்டு செல்வதால் தமது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கூறியே, இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

« PREV
NEXT »

No comments