Latest News

March 30, 2017

எங்கள் வீட்­டுக்கு ஒருநாள் வந்து பாருங்கள் நாம் படும் வேதனை உங்­க­ளுக்கு புரியும்
by admin - 0

எமது துன்­பத்தை இன்னும் இந்த அர­சாங்கம் உண­ர­வில்லை. ஒருநாள் எமதுவீட்டுக்கு வந்து அரசாங்கப் பிர­தி­நி­தி­கள் வந்து பார்க்­க­வேண்டும். அப்­போது அன்­றாடம் நாம் படும் வேத­னை­ பு­ரியும் என காணாமல் ஆக்­கப்­பட்­டோரின் உற­வுகள் தெரி­வித்­துள்­ளன.  
காணாமல் ஆக்­கப்­பட்­டோரின் உற­வி­னர்கள் ஒன்­றி­ணைந்து முல்­லைத்­தீவு மாவட்ட செய­லகம் முன்­பாக முன்­னெ­டுத்­துள்ள தொடர் கவ­ன­யீர்ப்பு   போராட்டம் நேற்றும் தொடர்ந்­தது.   
முல்­லைத்­தீவு மாவட்ட செய­லகம் முன்­பாக கடந்த 8 ஆம் திகதி ஆரம்­பிக்­கப்­பட்ட இந்த போரட்டம் எந்­த­வித சாத­க­மான பதில்­களும் அற்­ற­நி­லையில் தொடர்ந்து செல்­கின்­றது.
  இந்­நி­லையில் தமது துன்­பத்தை இன்னும் இந்த அர­சாங்கம் உண­ர­வில்லை என்றும் ஒருநாள் தமது வீட்டில் வந்து அர­சாங்க பிர­தி­நி­தி­களை வாழ்ந்து பார்க்­கு­மாறும் அப்­போது அன்­றாடம் தாம் படும் வேத­னை­பு­ரியும் எனவும் பாதிக்­கப்­பட்ட மக்கள் கவ­லை­யோடு தெரி­வித்­தனர்.
முள்­ளி­வாய்க்கால் வரை சென்று குடும்­பத்தில் ஒரு­வரை பலி­கொ­டுத்து அங்­க­வீ­னர்­க­ளாகி சொத்­துக்­களை இழந்து சுக­மி­ழந்து கடை­சியில் பிள்­ளை­க­ளையும் இரா­ணு­வத்தின் கைகளில் கொடுத்­து­விட்டு நிம­ம­தி­யி­ழந்து தவிப்­ப­தாக போரா­ட­ஙடம் மேற்­கொண்­டு­வரும் தாய்­மார்­களில் ஒருவர் தெரி­வித்தார்.
விரைவில் காணாமல் ஆக்­கப்­பட்ட எல்­லோ­ருக்கும் உரிய பதில்­களை இந்த அரசு வழங்­க­வேண்­டு­மெ­னவும் நிமமதியிழந்த வாழ்க்கையை இனியும் வாழமுடியாது எனவும் போராடிவரும் காணாமல் ஆக்கப்படடோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.
« PREV
NEXT »

No comments