Latest News

February 04, 2017

ஶ்ரீலங்கா சுதந்திர தினத்தையொட்டி லண்டனில் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
by admin - 0

லண்டன் தமிழ்  

ஶ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை எல்லா ஶ்ரீலங்கனும் கொண்டாட வரும்படி லண்டன் ஶ்ரீலங்கா தூதரகம் அழைப்பு விடுத்திருந்தது. 

ஆனால் இதற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை தமிழ் சொலிடாரிட்டி அமைப்புடன் இணைந்து பல அமைப்புகள் ஒழுங்கு செய்து தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

லண்டன் 

இன்று காலை 10 மணியில் இருந்து லண்டன் தூதரகத்தில் நடக்க இருக்கும் கொண்டாட்டத்தின் போது ஏராளமான தமிழர்கள் எதிர்ப்பை தெரிவிக்க திரண்டு தமது எதிர்ப்பை காட்டி வருகிறார்கள்.இந்த போராட்டத்தின் போது தாம் பின்வரும் கோரிக்கைகளை வைப்பதாக போராட்டக்காரர்கள் தெரிவித்திருக்கின்றனர்.இலங்கை அரசாங்கத்தால் ஐக்கிய இராச்சியத்தில் நடாத்தப்படும் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு அங்கு வாழும் இலங்கை மக்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.



போராட்டம் 


ஒடுக்கப்படும் மக்களாகிய எங்களுக்கு இந்த நாள் கொண்டாடும் தினமல்ல. இது எமது சுதந்திர தினல்ல. பல்வேறு நாட்டு பிரதிநிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளும் இந் நிகழ்வில் இன, மத வேறுபாடின்றி நமது எதிர்ப்பினைப் பதிவு செய்வதன் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கும், சர்வதேசத்திற்கும் நமது கோரிக்கைகளை ஒன்றிணைந்து முன்வைக்க வேண்டியது அவசியம்.

 

 

 

 

நமது கோரிக்கைகள்:

  • காணாமல் போனோர்கள் எங்கே? அவர்கள் ஒவ்வொருவருக்கும் என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்களை வழங்கு.
  • அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும்.
  • எல்லா இரகசிய சித்திரைவதை தடுப்பு முகாம்களும் மூடப்படல் வேண்டும்.
  • தமிழ் பேசும் மக்களின் வாழ்விடங்களில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும்.
  • சுதந்திரமான வெளிநாட்டு போர்க்குற்ற விசாரணை நடத்த படவேண்டும்.
  • அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், மாணவர்கள் , மக்கள் மீதான கொலைச் சம்பவங்களில் தொடர்புடையவர்களும், கொலையாளிகளும் தண்டிக்கப்படவேண்டும்.
  • அரசாங்கமும், இராணுவமும் கைப்பற்றிய மக்களின் நிலங்களில் இருந்து வெளியேற வேண்டும்.
  • கல்வி மற்றும் சுகாதாரம் தனியார் மயப்படுத்தல் நிறுத்தப்பட வேண்டும்.
  • மலையக மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
  • மலையக மக்களின் ஊதிய கோரிக்கைகளை நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.
  • மத தலங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தப்பட வேண்டும்.
  • முஸ்லிம் மக்களின் கலாச்சாரம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்.
 

தொடரும் டெலிகொம் ஊழியர்களின் போராட்டதின் கோரிக்கைகளை நிறைவேற்று. நிரந்தர நியமனம், சமஅளவு ஊதியம் ஆகியவற்றை வழங்கு. சுதந்திரம் எமது உரிமை தமிழ் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும்.போராட்டக்கள் மூலமே எமது உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்று நம் எல்லோருக்கும் மீண்டும் உணர்த்திய தமிழ்நாட்டுமாணவர்கள், இளைஞர்கள், உழைக்கும் மக்கள் மற்றும் போராட்டத்தில் பங்கெடுத்த அனைவருக்கும் தோழமையுடன் ஆதரவு தெரிவிக்கின்றோம் என போராட்ட ஒருங்கிணைப்பாளார்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

 

 

 

 

 


« PREV
NEXT »

No comments