Latest News

January 06, 2017

"எழுக தமிழ்" க்கு அணிதிரள அறைகூவல்
by admin - 0

 

வடக்கு- கிழக்கு மக்களின் அரசியல் அபிலாஷைகளை அரசாங்கத்துக்கும், சர்வதேசத்திற்கும் அழுத்தி கூற மட்டக்களப்பு ‘எழுக தமிழ்’ நிகழ்வில் அணிதிரளுமாறு மக்களுக்கு அறைகூவல் விடுப்பதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான ரீ.வசந்தராசா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் தமிழ் மக்கள் பேரவையினால் எதிர்வரும் 21ஆம் திகதி நடத்தப்படவுள்ள ‘எழுக தமிழ்’ நிகழ்வு தொடர்பாக நேற்று மட்டக்களப்பு ரயில் நிலைய வீதியிலுள்ள கூட்டுறவு சங்க கட்டிடத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன் போது அவர் மேலும் குறிப்பிடுகையில், “கடந்த காலங்களில் தங்களது பிரச்சினைகள் மற்றும் அபிலாஷைகளை தங்களது தலைவர்கள் தான் சம்பத்தப்பட்டோரிடம் எடுத்தச் சொல்லவேண்டும் என்றும் அவற்றை நிறைவேற்றப்படவேண்டும் என மக்கள் எதிர்பார்த்தனர் ஆனால் இப்போது அந்த நிலமை மாறிக்கொண்டு வருகின்றது.

இதுவரை காலமும் தலைமைகளுக்கு பின்னால் தான் மக்கள் சென்று கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது மக்கள் முன்னே போக தலைமைகள் பின்னே செல்ல வேண்டிய நிலமை ஏற்பட்டிருக்கின்றது. இந்த ‘எழுக தமிழ்’ நிகழ்வின் ஊடாக வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும். தங்களை தாங்களே நிர்வகித்துக் கொள்ளக் கூடிய சமஷ்டி முறையிலான தீர்வு வேண்டும். வடக்கு கிழக்கிலே திட்டமிட்ட குடியேற்றங்களும் பௌத்த மயமாக்கலும் நிறுத்தப்பட வேண்டும். அத்துடன், விசாரணையின்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் காலதாமதமின்றி விடுதலை செய்யப்பட வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய பிரச்சினைக்கு முடிவொன்று விரைந்து காணப்படல் வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படும்” என அவர் இதன் போது குறிப்பிட்டார்.

« PREV
NEXT »

No comments