Latest News

January 22, 2017

ஜல்லிக்கட்டுகாக கானா நாட்டில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்
by admin - 0

மேற்கு ஆபிரிக்கா கானா நாட்டில்  தமிழர்கள் ஆர்ப்பாட்டம்: 
 


கானா நாட்டில் பறத்த  ஜல்லிக்கட்டு போராட்டம் 

உலகம் எங்கும் ஜல்லிக்கட்டிற்கு தடை விதித்தமைக்கு எதிராக பாரிய போராட்டம் தமிழர்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.




அந்தவகையில் தமிழக அரசு கொண்டு வர உள்ள அவசர சட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சு ஒப்புதல் அளித்து ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்படவுள்ளது.

இருந்தாலும் தமிழ் நாடெங்கும் தற்போது தீப்பரவல் போல போராட்டங்கள் ஆங்காங்கு வெடித்து வருகின்றதனை அவதானிக்க முடிகின்றது.

அத்துடன் இன்று முதல் எங்கள் தியேட்டர்களில் வெளிநாட்டு குளிர்பானங்களான பெப்சி, கொக்ககோலா போன்றவற்றை விற்க மாட்டோம் என தியேட்டர்கள் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளார்.


 
தமிழக மக்களுக்கு பெரும் ஆதரவினை வழங்கும் வகையில் பல நாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுத்துவருகின்ற நிலையில் உலகத்தமிழர்கள் மத்தியில் ஒரு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறவேண்டும்.

அந்த வகையில் தமிழர்கள் வாழும் நாடுகளில் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில் "தென் ஆபிரிக்கா கானா நாட்டில் வாழ்த்துவரும் தமிழர்கள்  தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் "தமிழ் பரம்பரியத்திற்காக ஒன்றிணைய வாரீர்"    என்ற தலைப்பில்   ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளனர்.


 
ஒரு பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமைக்கிழமை மாலை 2  மணிக்கு இடம்பெறவுள்ளது. பல நூற்றுக்கணக்கான கானா வாழ் தமிழர்கள் ஒன்றிணைத்து மேற்கொண்டுள்ளனர்

செய்தி
சிவஞானம் செல்வதீபன்


 

 
 

 
« PREV
NEXT »

No comments