Latest News

January 23, 2017

இது பணம் சம்பந்தப்பட்டது இல்லை இனம் சம்பந்தப்பட்டது- ஹிப் ஹாப் தமிழா ஆதிக்கு பதிலடி
by admin - 0

போராட்டத்தினை திசைத்திருப்பும் நோக்கத்தில் பேட்டி அளித்துள்ள ஹிப் ஹாப் தமிழா என்கிற  ஆதிக்கு,  உணர்வு ரீதியாக போராடி வரும் இளைஞர்கள் பதிலடி தந்திருக்கிறார்கள்.
  அதில் சொல்லப்பட்டிருப்பதிலிருந்து சில முக்கிய வரிகள் :
 


‘’ தாங்கள் போராட்டக் களத்தை விட்டு வெளியேறியதற்கு காரணமாக,  நமது பிரதமர் அவர்களை நாங்கள் வசை பாடுவதை குறிப்பிட்டிருக்கிறீர்கள்.  ஜல்லிக்கட்டு என்பது எங்கள் போராட்டத்தி ற்கான ஒரு கருவி மட்டுமே என்பது உங்களுக்கு ஏன் தெரியாமல் போனது?

  நாட்டில் நிலவும் பல்வேறு அவலங்களைப் போக்கும் முயற்சிக்கான விதைதான் எங்களது போராட்டம். அரசியல் சார்ந்த அனத்து அவலங்களையும் நாங்கள் வெளிக்காட்டியே தீரவேண்டும் என்பதுவே எங்களது முழு நோக்கம்.

  இந்தப் போராட்டத்தின் மூலம் நாங்கள் அரசுக்கு மட்டுமல்ல பொது மக்களுக்கும் பல்வேறு பாடங்களை கற்றுக் கொடுத்திருக்கிறோம்.  எங்கள் போராட்டத்தின் மூலம் பல்வேறு உறுதி மொழிகளை மக்களை மனமேற்க வைத்துள்ளோம்.
 
பிரதமரை வசைபாடியதுதான் தங்களுக்கு வருத்தமென்றால், தாங்கள் களத்தைவிட்டு வெளியேறியதில் எங்களுக்கு மகிழ்ச்சியே.  அவர் பிரதமராக இல்லாமல் கைதேர்ந்த அரசியல்வ தியாக இருப்பது உங்களுக்கு ஏன் புரியாமல் போனது.


  கடும் வறட்சி என்பது கண்கூடாகத் தெரிந்தும் தனது அரசியல் புலமையை, போராட வக்கில்லாத நம் விவசாயியிடம் காண்பித்துக் கொண்டிருப்பவரை கட்டியணைத்து முத்தமிடச் சொல்கின்றீர்களா?  

தனி நாடு என்பது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. அவ்வாறு எங்களிடையே சிலர் சொல்வது எங்கள் உணர்வின் உச்சம் என்பதும் தங்களுக்கு விருப்பமான அந்த கைதேர்ந்த அரசியல்வாதியின் மீதான கோபத்தின் வெளிப்பாடு என்பது உங்களுக்கு புரியாமல் போனது ஏனோ?
 
இறுதியாக...உங்களுடனான தெளிவில்லாத துவக்கத்தை, மிகத் தெளிவாக நாங்கள் தொடர்கிறோம்.  

உங்கள் மாற்றத்திற்கு மாற்றப்பட்ட பணம் காரணமாக இருக்கலாம் ஆனால் இது எம் இனம். சம்பந்தப்பட்டது 

நன்றி.போராட்டக்களத்திலிருந்துஒரு தமிழன். ’’

- இளையர்                       



« PREV
NEXT »

No comments