Latest News

January 03, 2017

2017 உலக அழிவு ஆரம்பம் - இலங்கை 3ம் உலக யுத்ததிற்கு காரணமாகிறது
by admin - 0

தமிழ்  

நடைமுறை உலக பயணத்தில் முக்கியமான தொரு கேள்வி அடுத்த உலக யுத்தத்திற்கு இலங்கை வித்திடுமா? இப்போதைக்கு வெளிப்படையாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக இது உச்சரிக்கப்பட்டு கொண்டே தான் இருக்கின்றது.

உலகத்தோடும், கடந்து வந்த சம்பவங்களின் அடிப்படையிலும் இலங்கையை தொடர்பு படுத்தி பார்க்கும் போது இந்த கூற்றுக்கு இலங்கையின் பெயரும் அடிபட செய்கின்றது.


உலக அளவில் பலரையும் கவர்ந்துள்ள 16ஆவது நூற்றாண்டைச் சேர்ந்த தத்துவஞானி மைக்கேல் டி நாஸ்டிரடாமஸ் என்பவரது கணிப்புகள் இன்றும் குழப்பமாகவும், சர்ச்சையாகவும் இருக்கின்றது.

காரணம் அப்போது 1555 ஆம் ஆண்டு இவர் எதிர்வு கூறியவை 2016ஆம் ஆண்டு அப்படியே நடந்தது. எப்படி இது சாத்தியம் என விஞ்ஞானிகளும் திக்கு முக்காடி போய் உள்ளதோடு, நடுங்கவைக்கும் விடயமாக உள்ளது 2017 தொடர்பில் அவர் கூறியுள்ள கணிப்புகள்.

உதாரணமாக அமெரிக்காவின் அதிபர் மாற்றமடைவார் என்று அவர் கணித்ததோடு ஒபாமாவே கடைசிஅதிபர் என்றார். அதிபர் மாறி விட்டார் ஆனால் கடைசி அதிபர் மட்டும் இன்னும் நிறைவேறவில்லை காரணம் ட்ரம்ப் இருக்கின்றார் இன்னும்.

இயற்கைப் பேரிடர்கள், பேரழிவுகள், கடல் கொந்தளிப்புகள், நில நடுக்கங்கள் வெள்ளப்பெருக்குகள் அதிக அளவில் ஏற்படும் ஆண்டாக 2016 அமையும் எனவும் கணித்தார். இவையும் நடைபெற்றது என்பது தெரிந்த விடயமே.

மத்திய கிழக்கு நாடுகள் 2016ஆம் ஆண்டு பற்றி எரியும் கணித்ததும் நடந்தது கடந்த 4 வருடங்களாக மத்திய கிழக்கு பற்றி எரிந்து கொண்டு தான் இருக்கின்றது.

அதே போல விமானங்கள் விபத்துக்கு உள்ளாகும், காணாமல் போகும் என்றும் அவர் கணித்தது கூட அப்படியே நடந்தது ஆச்சரியம் தான்.

துருவப் பகுதிகள் உருகும் 2016இல் நடக்கும் என நாஸ்டிரடாமஸ் கணித்தது இன்னொரு முக்கிய அம்சம் துருவப் பகுதிகள் மூழ்கும் என்பது. உலக அளவில் வெப்பமயமாதல் அதிகரித்து வருவதாக ஏற்கனவே விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர்.

அதே போன்று வரலாறு காணாத வெப்ப நிலையும் 2016ஆம் ஆண்டு பதிவாகியமையும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.

அதே போன்று 2017 தொடக்கம் உலகம் அழிவை சந்திக்க ஆரம்பமாகும் என்றும், ஈராக் போர்தான் உலக அழிவுக்கான முதல் படி என்றும் அவர் கூறியுள்ளார்.

சிரியா யுத்தம் தொடர்பிலான பார்வைகள் தற்போது மாற்றமடைந்து, அமெரிக்கா ரஷ்யாவிற்கு இடையே தொடர்ந்து வரும் பனிப்போரை வெளிப்படுத்தும்.

வகையில் இரு நாடுகளும் பூசலை ஏற்படுத்தும் வகையிலான கருத்துகளையே இப்போது வெளிப்படுத்திக் கொண்டு வருகின்றது காணக் கூடியதாகவே இருக்கின்றது.

ஏற்கனவே மாயன் காலண்டரில் கூட இப்படி உலகம் அழியும் என்று கூறப்பட்டு அது பொய்யாகிப் போன காரணத்தினால் அது தொடர்பில் பெரிதாக பேசப்படுவதில்லை.

என்றாலும் இவருடைய மூன்றாம் உலக யுத்த கணிப்பில் ஒரு சிறிய நாடு மூன்றாம் உலக யுத்தத்திற்கு வித்திடும் என்று கூறியுள்ளார்.


இவர் இங்கு குறிப்பிட்டது இஸ்ரேலை என்றே பல ஆய்வாளர்களின் கூறும் கருத்து. ஆனாலும் அது இலங்கையாக இருக்குமா? என்ற சந்தேகமே இப்போது வலுப்பெற்றுள்ளது. முள்ளிவாய்க்கால் அழிவிற்கு பழிவாங்க தமிழர்களின் ஆத்மாக்கள் இன்றும் தங்களை அழித்த உலகை பலிவாங்கும் என்னத்துடன் இருப்பதால் உலகப் போரை ஏற்படுத்தி தங்கள் பலிவாங்கும் படலத்தை ஆரம்பிக்கும் .

காரணம் அமொிக்காவும், சீனாவும், இந்தியாவும் கூட இலங்கை கடற்பரப்புகளையும் துறைமுகங்களையும் ஆக்கிரமிக்கும் நோக்கோடு செயற்படுகின்றன.தமிழர்களை அழிப்பதில் இவர்களின் பங்கு தவிர்க்க முடியாது.

பொருளாதார ரீதியான அபிவிருத்தி செயற்பாடுகளாக இவை நோக்கப்பட்டாலும் கூட அடுத்த பக்கம் ஒரு நாட்டுக்குள் வல்லரசுகள் போட்டியிடுவது ஆபத்தானது. பொருளாதார யுத்தம் போராகவும் மாறலாம்.

அமெரிக்காவின் நோக்கம் திருகோணமலை துறைமுகத்தை கையகப்படுத்துவதே என்ற எண்ணம் கூட தோன்றுகின்றது.

அதே போன்று இப்போதைய நிலவரப்படி அடுத்து அமெரிக்கா என்ன செய்யும் என்பது கூட தெரியாத நிலையே தொடருகின்றது, அதே போல் வல்லரசுகளும் கூட பகிரங்கமான போர் ஒத்திகையிலும் கூட ஈடுபட்டு வருகின்றது.

ஆக மொத்தம் என்றோ நாஸ்டிரடாமஸ் கணித்து விட்டவை நடந்து கொண்டு வர, 2017ஆம் வருடம் தொடர்பில் அவர் கூறியவை நடந்து விடுமா?

அது மட்டும் அல்லாமல் அனைத்து வகையிலும் 2017 என்பது ஆபத்தான வருடமாகவே நோக்கப்படுகின்றது. ‘Planet X: The 2017 Arrival’ எனும் ஆய்வுப் புத்தகத்தின் மூலம் David Meade என்பவர் ஓர் இருண்ட கிரகம் பூமி மீது 2017இல் மோதும் என்றும் தெரிவித்துள்ளமை அதிர்ச்சியானதொரு செய்தியே.

இதன்படி உலக அழிவின் ஆரம்பமா இந்த 2017 என்பது கூட இப்போது அச்சத்தை ஏற்படுத்தும், நடுங்கவைக்கும் விடயமாக பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

ஆனாலும் மக்களுக்கு இது தொடர்பில் வெளிப்படுத்தப்படுவதில்லை.

« PREV
NEXT »

No comments