Latest News

December 24, 2016

வொய்ஸ் ஒவ் அமெரிக்க ஒலிபரப்பும் இந்திய,சீனப்போருடன்,புலிகளும்..!!-ஈழத்து துரோணர்.!!
by admin - 0

இரணவிலவில் உள்ள, "வொய்ஸ் ஒவ் அமெரிக்கா ஒலிபரப்பு நிலையத்தை" மூடுவதற்கு, அமெரிக்கா முடிவு செய்திருப்பதாக, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த செய்தி, பலருக்கு சாதாரண செய்தியாகவே இருக்கும்?

இந்த "வொய்ஸ் ஒவ் அமெரிக்கா நிலையத்துக்கு" பின்னால், கேந்திர முக்கியத்துவமும், எமது போராட்டத்தினுள் இந்திய தலையீடும், அதன் தொடர்ச்சி, முள்ளிவாய்க்கால் வரை வந்ததே முடிவுபெற்றது.!
2ம் உலகப்போருக்கு பின் உலக நாடுகள், இரண்டாகப்பிரிந்து அமெரிக்காவின் கீழ் ஒரு அணியும், சோவியத் யூனியனின் தலைமையில் இன்னொரு அணியும், பனிப்போரில் ஈடுபட்டிருந்தது.

இதில், இந்திய அரசு சோவியத் யூனியனின் பக்கமும், சிங்கள அரசு அமெரிக்காவின் பக்கமும் நிலையெடுத்திருந்தன.
காலம் கடந்து, எமது ஆயுதப்போராட்டம் தலைவரின் வழிகாட்டுதலில் நிதானமாகவும், உறுதியாகவும், வளர்ச்சியை நோக்கி வந்துகொண்டிருந்தது.
இந்த நேரத்தில் உலகப்பொலிஸ்காரனான அமெரிக்கா, ஆசிய நாடுகளின் இராணுவ, புலனாய்வுத்தகவல்களைத் திரட்டுவதற்கு இலங்கையை தெரிவுசெய்திருந்தது. கரணம், வான் அலைகளைப் பரிமாற்றம் செய்யும் கேந்திர மையமாக இரணவிலப்பகுதி இருந்தது.
அந்த இடத்தில் "ஒலிபரப்பு நிலையம்" என்ற பெயரின்CIA இன் இரகசிய முகாம் அமைப்பதற்குரிய நடவடிக்கையை1981 ஆரம்பித்து, 1983ம் ஆண்டு அதற்கான அனுமதியைப் பெற்று 1993இல் கட்ட ஆரம்பித்தது அமெரிக்க அரசு.!
இதற்கான அனுமதியை அப்போதைய ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி J.R.ஜெயவத்தனா வழங்கினார்.(இப்போதைய ரணில் அரசு) J.R.ஜெயவத்தனாவை ஆட்சியில் அமர்த்துவதற்கு CIA மறைமுகமாக உதவியது. இதனால் அமெரிக்க சார்புநிலையில் J.R.ஜெயவத்தனா இருந்தார்.
சிங்கள அரசின் அமெரிக்காவுடனான தேன்நிலவு, இந்திய அரசுக்கு கசப்பாக இருந்தது. தனது இராணுவத் தகவல்ப்பரிமாற்றம் அமெரிக்க அரசால் ஒட்டுக்கேட்கப்படப்போவதை அறிந்த இந்திய அரசு, பல தடவை சிங்கள அரசை எச்சரித்தபோதும், சிங்கள அரசு இந்திய அரசை கண்டுகொள்ளவில்லை.!

அந்த நேரத்தில் தான், திருநெல்வேலித்தாக்குதல் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு,13இராணுவத்தை கொன்று உலகையே தம் பக்கம் திருப்பினர் புலிகள்.!

இதனால், ஆட்டம் கண்ட சிங்கள அரசு அமெரிக்காவிடம், புலிகளை அடக்க உதவி கேட்டது. 

அமெரிக்காவும் அதற்கான இராணுவ, புலனாய்வு உதவிக்காக பணத்தை, அமெரிக்காவே செலவு செய்து.

அந்த பொறுப்பை இஸ்ரேலுலிடம் கொடுத்தது அமெரிக்கா. இப்படித்தான் இஸ்ரேல் எமது போராட்டத்தினுள் நுழைந்தது. அமெரிக்க உதவியுடன், சிங்கள இராணுவக்குழு இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டு, அங்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டது.

பின்னாளில் அவர்களால் உருவாக்கப்பட்டதே, "சிங்களப்பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்". இந்த பீல்பைக் அணியினரின் கொலைகளை இன்றும் கிழக்குமாகாண மக்கள் அச்சத்துடனேயே கூறுவர். இதன் தளபதியாக அப்போதைய ஜனாதிபதி J.R.ஜெயவத்தனாவின் மருமகனே இருந்தார்.
இவைகளைப் பாத்துக் கொண்டிருந்த இந்திராகாந்தி அரசு, "சிங்கள அரசை வழிக்கு கொண்டுவருவதற்கு" அப்போது ஈழத்தில் இருந்த போராட்ட குழுக்களுக்களை தெரிவு செய்தது.
இயக்கங்களுக்கு பயிற்சி கொடுத்து, நாட்டில் குழப்பத்தை உண்டாக்கி, சிங்கள அரசை தன்வழிக்கு கொண்டு வருவதற்கும், அதன் மூலம் இந்த போராட்டக்குழுக்களை, தம் கைக்குள் வைத்திருக்கவும், ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க கணக்குப்போட்டனர் இந்தியர்கள்.
உண்மையில் இந்திய அரசின் இராணுவப்பயிற்சிகள் மாற்றுக் குழுக்களுக்கு தேவைப்பட்டபோதும், புலிகளுக்கு தேவைப்படவில்லை. இந்திய அரசு பயிற்சி வழங்குவதற்கு முன்னமே ஆயுத ரீதியாகப்பலம்பெற்றிருந்த புலிகள், பல தாக்குதல்களை (திருநெல்வேலித்தாக்குதல் உட்பட) புலிகளால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

ஆனால், சில ராஜதந்திர அழுத்தங்களுக்கு பிறகு, வேண்டா வெறுப்பாகவே (கடைசியாக) இந்த பயிற்சிக்கு தலைவர் சம்மதித்தார். இப்படித்தான் இந்திய அரசு எமது போராட்டத்தினுள் வந்தது.!

தமிழ் மக்கள்மீதான எந்த கரிசனையும் அவர்களுக்கு இருக்கவில்லை. தமது பூகோள நலன் சார்ந்தே எமக்கு உதவினர்/அல்லது எம்மை பாவித்தனர். இதை அன்றே தலைவர் உணர்ந்திருந்தார்.!
அதற்கு உதாரணம், முதலாவது பாசறையில், அந்த முகாமுக்கு பொறுப்பாக இருந்து, கிட்டண்ணையும் பயிற்சி எடுத்தார். அப்போது பயிற்சி நிறைவின் பின், பயிற்சி கொடுத்த இந்திய இராணுவ மேஜர். தர அதிகாரியின் பிரிவை தாங்கமுடியாத கிட்டண்ணை, அந்த அதிகாரியை கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்துவிட்டார்.
இந்த விடையத்தை அண்ணை வரும்போது பொன்னம்மான் கூறிச்சிரித்துள்ளார். அதற்கு அண்ணை கிட்டண்ணைக்கு கூறினாராம் "கிட்டு இதுக்கேன் அழுதனி,இதே இந்திய இராணுவத்துக்கு நாங்கள் அடிக்கவேண்டி வரும்" என்றாராம்.!

அது போலவே, ஐந்து வருடங்களின் பின் இந்திய இராணுவத்தினருக்கு நாம் அடிக்கவேண்டி வந்தது. தலைவரின் இராணுவத் தூரநோக்கு பின்னைய நாளில், வியப்பாகவே போராளிகளால் பாக்கப்பட்டது.
இப்படி வல்லரசுகளின் "கபட பூகோள அரசியலில்" எங்களைப்பாவித்தன வல்லரசுகள். மூத்தகுடியினமாகிய நாங்கள், முள்ளிவாய்க்கால் வரை வந்து இவர்களால் பலியாக்கப்பட்டோம்.!

இன்று, இராணுவத்தொழில்நுட்ப வளர்ச்சியில் உச்சத்திலிருக்கும் அமெரிக்காவிற்கு, "வொய்ஸ் ஒவ் அமெரிக்கா ஒலிபரப்பு"நிலையத்தின் தேவை அற்றுப்போனமையால், இரணவிலவில் உள்ள ஒலிபரப்பு நிலையத்தை விலகிக்கொள்ள அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
இதை சிறிலங்காவின் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம உறுதி செய்துள்ளார்.
அமெரிக்கா கைவிடவுள்ள இரணவில பிரதேசத்தில், 5000 ஏக்கர் நிலத்தை, தமக்கு வழங்குமாறு சீனா அரசு சிங்கள அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இன்று இராணுவச்சமநிலைப் போட்டியில் மூன்றாமிடத்தில் இருக்கும் சீன அரசு, முதல் இடத்தை பிடிக்கும் நோக்கில் காய்களை நகர்த்தி, ஆயுத உற்பத்திகளை பெருக்கி வருகின்றது. பொருளாதார ரீதியில் அசுர வளர்ச்சியை கண்டுவரும், சீனாவின் முத்துமாலைத்திட்டம், கிட்டத்தட்ட நிறைவு பெற்றுவிட்டது.
அதற்கான தொடர்பாடலுக்கு, மையப்புள்ளியாக இருக்கும் இரணவிலவில், கண் வைத்துவிட்டது சீனம். 
இந்த இடம் சீன அரசின் கைகளுக்கு சென்றால் யாருக்கு ஆபத்து?
சந்தேகமில்லாமல் இந்தியாவுக்கு தான்.!
முத்துமாலைத்திட்டமே இந்தியாவின் கழுத்தை இறுக்குவதற்கே சீனாவால் போடப்பட்டது.
மேற்கு உலகத்தால் மகிந்தவின் ஆட்சியை அகற்றி, தமக்கு சார்பான மைத்திரியை கொண்டுவந்தபோதும், பொருளாதார தடுமாற்றத்தில் உள்ள, சிங்கள அரசின் பொருளாதாரத் தேவையை, அமெரிக்காவால் பெருமளவில் நிறைவேற்ற முடியாதுள்ளது இப்போது.
காரணம், அமெரிக்க அரசின் இப்போதைய பொருளாதாரத் தடுமாற்றத்தினால், இலங்கை அரசுக்கு பெருமளவில் உதவமுடியாது என்பதை அறிந்த சிங்கள அரசு, சீனாவின் கையை எதிர்பார்ப்பது தவிர்க்கமுடியாததாக உள்ளது.
அதனால், சீனாவின் ஆதிக்கம் இலங்கையை சுற்றிப்படர்வதை இந்திய அரசால் தடுக்க முடியாது. 
இப்போது இந்தியத்தின் மூக்கருகில் சீனா வந்ததற்கு காரணம், இந்திய அரசின் பிழையான இராணுவ நகர்வே ஆகும்.!
புலிகள் இருக்கும் வரை இப்படியான நெருக்கடிகளை இந்திய அரசு சந்திக்கவில்லை.!
புலிகள் அதற்கு அரணாக நின்றனர்.!
இன்று தனது நாட்டின் இருப்பையே கேள்விக்குறியாக்கி உள்ளது இந்திய அரசு. சீன இராணுவத்தின் அசுர வளர்ச்சியின் முன்னாள் இந்திய அரசின் ஆயுத பலம் ஒன்றுமே இல்லை என்பதே யதார்த்தம்.!

இந்திய இராணுவத்தின் ஏவுகணைகளான அக்கினியும், பிருதிவியும் காட்டி, இந்திய அடித்தட்டு மக்களை வேண்டுமானால் திருப்திப்படுத்தலாம்.!
ஆனால், சீன அரசின் இராணுவத்தின் முன்னாள் இவைகள் அனைத்தும் வெறும் வாணவேடிக்கைகளே ஆகும். இது தான் யதார்த்தம்.!

இதை இனி வரும் போர்கள் உறுதி செய்யும். அப்போது சீனாவும், பாக்கிஸ்த்தானும் ஓரணியில் கைகோர்க்கும், 

அப்போது புலிகளின் அருமை இந்திய அரசுக்கு தெரியவரும்.!
இந்திய அரசின் தமிழர் விரோத மனநிலை (தமிநாட்டு) இந்திய அரசுக்கு எப்போதும் பாதகமே.!
தமிழர் ஆதரவில்லாது இந்திய அரசு, மீட்சி பெறுவதென்பது "போன பஸ்சுக்கு, கைக்காட்டுவதற்கு ஒப்பாகும்"
அதுவரை இந்திய இராணுவம் வேண்டப்போகும் அடிகளை, வேடிக்கை பார்க்கும் நிலையிலேயே தமிழர் நாம் இப்போது இருக்கின்றோம்.! 
எதிர்பார்ப்புடன் துரோணர்.!!
« PREV
NEXT »

No comments