Latest News

November 10, 2016

மாலு சந்தி மைக்கல் மகுடம் இளவாளை யங்கென்றீஸ் வசம்
by admin - 0

மாலு சந்தி மைக்கல் மகுடம் இளவாளை யங்கென்றீஸ் வசம் 


 
இறுதிவரை போராடியது ஊரேழு றோயல் அணி 

மாலு சந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம் யாழ் மாவட்ட ரீதியாக நடாத்திவந்த உதைபந்தாட்டதொடரின் இறுதிப்போட்டி 9/11/2016 இரவு 7-30 மணியளவில் பெரும் திரளான ரசிகர்கள் மத்தில் கழகத்தலைவர் த -வேணுகானன் தலைமையில் ஆரம்பமாகியது.

இவ் இறுதிப்போட்டியில் யாழ் மாவட்டத்தில் முன்னணி கழகங்களான ஊரேழு றோயல் அணியை எதிர்த்து இளவாளை யங்கென்றீஸ் அணி மோதியது , விறுவிறுப்பாக ஆரம்பமாகிய போட்டியில் 9 நிமிடத்தில் றோயல் அணி முன்களவீரர்  கஜகோபன் கோலினை பெற்றுக்கொடுத்தார். தொடர்ந்து நடைபெற்றபோட்டியில் இரு அணிகளும் சிறப்பாக ஆடியபோதும் முதற்பாதி வரை எந்தவிதமான கோலினையும் போடமுடியவில்லை 1-0 என்ற கோல்கணக்கில் றோயல் அணி முன்னிலையில் இருந்தது.
 

இரண்டாவது பாதி ஆட்டத்தில் 33 நிமிடத்தில் அனோஜன் தனது அணிக்கான கோலினை பெற்றுக்கொடுத்தார் விறுவிறுப்பாக தொடர்ந்த ஆட்டத்தில் 41 நிமிடத்தில் மகிபனும்  44 நிமிடத்தில் மீண்டும் அனோஜனும் கோலினை பெற்றுக்கொடுத்து தமது அணியின் வெற்றியை உறுதிசெய்தனார்.
 
ஆட்டம் முடியும் சில நிமிடங்கள் இருக்கையில் றோயல் அணி வீரர்  கஜகோபன் கோலினை பெற்றுக்கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார் ஆனால்  இறுதிவரை ஊரேழு றோயல் அணி போராடி தோற்றது.
 
இறுதியில் 3-2 என்ற கோல்கணக்கில் இளவாளை யங்கென்றீஸ் அணி வெற்றி பெற்று மாலு சந்தி மைக்கல் வெற்றிக்கிண்ணத்தை கைப்பெற்றியது , ஆட்டநாயகனாக இளவளை யங்கென்றீஸ் அணியின் வீரா் அனோஜனும் தொடர்நாயகனாக ஊரேழு றோயல் அணி வீரர்  கஜகோபன் ஆகியோர்  தெரிவுசெய்யப்பட்டனார்.

நெல்லியடி செல்லமுத்துஸ் அனுசரனையுடன் சம்பியனாகிய இளவாளை யங்கென்றீஸ் அணிக்கு ரூபா -30,000 பணப்பரிசும் வெற்றிக்கேடயமும் 

இரண்டாவது இடத்தைப்பெற்ற ஊரேழு றோயல் அணிக்கு ரூபா 15,000 வெற்றிக்கேடயமும் வழங்கிகௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாராஜா கலந்துகொண்டுசிறப்பித்தார்.
 
சிறப்புவிருந்தனர்களாக வடமாகாணசபை உறுப்பினர்கள்  ச -ஆனந்தி , வே -சிவயோகன் ,எம் -கே -சிவாஜிலிங்கம், க -தர்மலிங்கம் , ச-சுகிர்தன் , என் -கே - விந்தன் கௌரவ விருந்தினர்களாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொ-கஜேந்திரகுமார் , கரவெட்டிபிரதேசசெயலர் எஸ்-சிவசிறி , பருத்தித்துறை மின்சாரசபை அத்தியசகர், கே -கமலகோபன் , நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்-பி-ஏ பியந்த , வடமராட்சி உதைப்பந்தாட்டலீக் தலைவர் டி -எம் -வேதாபரணம் , மாலை சந்தை சிறி வரதராஜ விநாயகர் ஆலயத்தலைவர் எஸ் -சிறிசண்முகதேவ் ஆகியோர் கலந்துகொண்டுசிறப்பித்தனார் ,
« PREV
NEXT »

No comments