Latest News

November 03, 2016

புதிய கருத்துக்கணிப்பில் ஹிலாரி முன்னிலை
by admin - 0

மின்னஞ்சல் புகார் தொடர்பாக மீண்டும் விசாரணை என எஃப்.பி.ஐ. அறிவித்த பின்னரும், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலாரி, ட்ரம்பை விட 6 விழுக்காடு முன்னிலையில் இருப்பதாக கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.

எஃப்.பி.ஐ. அறிவிப்பு வெளியாவதற்கு முன்னர் ஹிலாரிக்கு 43 சதவீதமும், டிரம்புக்கு 37 சதவீதமும் ஆதரவு இருப்பதாக கருத்துக் கணிப்பு தெரிவிக்கப்பட்டிருந்து. எஃப்.பி.ஐ. அறிவுப்புக்கு பின்னர் இந்த இடைவெளி குறைந்து, இருவருக்கும் இடையே கடும்போட்டி நிலவுவதாக கூறப்பட்டது. 

ஆனால், எஃப்.பி.ஐ. அறிவிப்பு வெளியிட்டதன் பிறகு அக்டோபர் 28 மற்றும் நவம்பர் 1ஆம் தேதிக்கு இடையே ராயட்டர்ஸ் செய்தி நிறுவனமும், இப்சோ என்ற ஆய்வு நிறுவனமும் இணைந்து ஆன்லைன் மூலம் 50 மாநிலங்களிலும் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தி அதன் முடிவை வெளியிட்டுள்ளன. 

அதன்படி  ஹிலாரிக்கு 45 சதவீதம் பேரும், டிரம்புக்கு 36 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். 
« PREV
NEXT »

No comments