Latest News

November 02, 2016

ஈழத்தமிழர் இருவருக்கு கானா நாட்டின் ஜனாதிபதி விருது.
by admin - 0

 

மேற்கு ஆபிரிக்கா நாடாகிய கானா நாட்டின் ஏற்றுமதிக்கான ஜனாதிபதி உயர் விருது வழங்கி ஈழத்தமிழர் இருவர் கௌரவிக்கப்பட்டுள்ளனார். 

யாழ்ப்பாணம் வடமராட்சி கரணவாய் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குகதாசன், அல்வாய் கிழக்கு பகுதியைச் சேர்ந்த கணேசராசா சதீசன் ஆகிய இருவரும் இணைத்து 2000 ஆம் ஆண்டுமுதல் கானா நாட்டில் விவசாய மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் ஐரோப்பா நாடுகளுக்கும் மற்றும் ஏனைய சில நாடுகளுக்கும் ஏற்றுமதியை மேற்கொண்டு வருகின்றர்கள். 

அந்த நாட்டில் இந்த வருடம் அதிக ஏற்றுமதி செய்யும் வர்த்தகர்களில் ஈழத்தமிழர்கள் இருவர் முன்நிலையில் இருப்பது தமிழர் அனைவருக்கும் பெருமையான விடயம்.

அத்துடன் கடந்த முறை 2 வது இடத்தைப்பெற்று வெள்ளிப்பதக்கம் பெற்றவர்கள் இந்தமுறை 1 வது இடத்தைப்பெற்று தங்கப்பதக்கம் பெற்று பெருமை சேர்ந்துள்ளார்கள். 

இன்று கானா தலைநகரான அக்ராவில் ஜனாதிபதி ஜோன் டமனி மகாமா முன்ணிலையில் இவ்விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது.

ஆபிரிக்கா நாடுகளில் ஏற்றுமதிக்கான ஜனாதிபதி விருது ஈழத்தமிழர்களுக்கு வழங்கப்படுவது இதுவே முதல்தடவை என்பது குறிப்பிடத்தக்கது

 

 
« PREV
NEXT »

No comments