Latest News

October 23, 2016

காவற்துறையினர் வெறியில் இருந்ததால் பொலீஸ் சுட்டிருக்கலாம் - பிஸ்கட், சோடா தந்து உதவி செய்கிறோம் மன்னித்துவிடுங்கள்
by admin - 0

யாழ்ப்பாணம் வைத்தியசாலையிலிருந்து என்னையும் மகளையும் ஒவ்வாரு காவல்துறையினர் கையை பிடித்து அழைத்துச் சென்று ஏசி வாகனம் ஒன்றினுள் ஏற்றி யாழ் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர்  அங்கு எங்களுக்கு தேனீர் தந்தனர் ஆனால் நாங்கள் மறுத்துவிட்டோம். பின்னர் அங்கு கம்பஸ் பெடியளும் வந்திட்டாங்கள்.

 

அங்கு வைத்து காவல்துறையினர் எங்களிடம் தெரிவித்தனார் இதனை நாங்கள் திட்டமிட்டு செய்யவில்லை தவறுதலாக நடந்துவிட்டது. காவல்துறையினர் வெறியில் இருந்தார்களோ என்னவோ தெரியவில்லை சுட்டதுதான் மாணவர்கள் மீது பட்டுவிட்டது  மன்னித்துக்கொள்ளுங்கள் இனிமேல் இப்படியொன்றும் நடக்காது.

சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கொழும்பில் இருந்து ஆட்கள் வருகின்றார்கள், அவர்களை நாங்கள் கைது செய்திருக்கின்றோம் கோட்சுக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்போம் தெரியாமல் நடந்த இந்த சம்பவத்தை நீங்கள் மன்னித்துக்கொள்ளுங்கள்.

 

காவல்துறை உங்களுக்கு பந்தல் போடுவதற்கும் கதிரைகள் பிஸ்கட், சோடாவும் தந்து எல்லா செலவையும் செய்யவார்கள் என்று சொல்லிப் போட்டு அங்கிருந்து (யாழ்ப்பாணம்) இங்குள்ள (கிளிநொச்சி) டிஜஜி ஒபீசுக்கு கோல் பண்ணி எங்கட வீட்டு முகவரியைம் சொல்லி போய் எல்லா உதவியையும் செய்ய சென்னார்கள்

நாங்கள் செய்த குற்றத்திற்கா போஸ்மோட்டம், பெட்டிச் செலவு, வாகனச் செலவு எல்லாத்தையும் காவல்துறையினர் செய்து தாறம் என்றும்  அந்த வீட்டுச் செலவு இந்தவீட்டுச்செலவு எல்லாத்தையும் நாங்கள் செய்யிறம் என்றும் சொன்னார்கள். ஆனால் இங்க எங்கட ஆட்கள் அவர்களை செய்ய விடவில்லை காவல்துறையினர் இங்க வரக் கூடாது உங்கட உதவியும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று சொல்லி அனுப்பிவிட்டுடினம்

பிறகு கொழும்பிலிருந்து காவல்துறை பெரியாள் ஒருவர் கதைக்கிறன் என்று சொல்லி அவர் சொன்னார் உங்கட பிள்ளைகள் ஏஏல், ஓஏல் படிச்சிருக்கினமா நாங்கள் அவர்களுக்கு வேலைவாய்ப்பு தாறம். உங்களுக்கு நாங்கள் இந்த உதவியை மனிதாபிமான முறையில் செய்யிறம் மன்னிச்சிக்கொள்ளுங்கள் தவறுதலாக நடந்துவிட்டது என்றார்கள் என கொல்லப்பட்ட யாழ் பல்கலைகழக அரசறிவியல் துறை மூன்றாம் வருட மாணவனான நடராசா கஜன் அவா்களின் தாயாரான நடராசா சறோஜினி(வயது 61) தெரிவித்துள்ளார்.

« PREV
NEXT »

No comments