Latest News

October 27, 2016

மூன்றாம் உலகப்போர் ஏற்படும் அபாயம்- படைகளை அனுப்பியது பிரித்தானியா
by admin - 0

 

அண்மையில்  ரஷ்யாவின் 6 போர் கப்பல், சிரியா நோக்கிச் செல்வதாக கூறி பிரித்தானியாவின் ஸ்காட்லான் பகுதி கடலில் நுளைந்தது. 

 

இதனை அடுத்து எழுந்த பெரும் பிரச்சனை பற்றி அனைவரும் அறிவோம். இது இவ்வாறு இருக்கு, சுமார் 10,000 மைல்கள் தூரம் பறந்துசென்று தாக்க வல்ல அணு ஆயுதம் ஒன்றை ரஷ்யா வைத்திருப்பது தெரியவந்துள்ளது. குறித்த ஏவுகணையில் சுமார் 16 அணு குண்டுகள் உள்ளது என்றும். இது ராடர் திரைகளின் கண்ணில் மண்ணை தூவி தன்னை உரு மறைப்புச் செய்து சென்று தாக்க கூடியது. அதாவது மாஸ்கோவில் இருந்து இதனை நேரடியா பிரித்தானியா  மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கு ஏவ முடியும் என்பதே பெரும் பதற்றத்தை தோற்றுவித்துள்ளது.

 

அத்துடன் இதனை மாஸ்கோவில் இருந்து கிழக்கு அமெரிக்கா வரை தாக்கவும் முடியும். இதனால் ஏற்பட்டுள்ள பதற்றத்தால், ரஷ்யாவின் அண்டை நாடாக உள்ள எஸ்டோனியாவுக்கு , பிரித்தானியா தனது 800 படை வீரர்களையும், யுத்த டாங்கிகளையும் மற்றும் ஆளில்லா வேவு விமானங்களையும் அனுப்பியுள்ளது. 

 

எஸ்டோனியா நாட்டுக்கு அருகாமையில் உள்ள லட்வியா நாட்டிற்கு கனடாவும் தனது படைகளை அனுப்பியுள்ளது லித்துவேனியா மற்றும் போலந்து ஆகிய நாடுகளுக்கு முறையே ஜேர்மனி மற்றும் அமெரிக்கா தனது படைகளை அனுப்பி அங்கே நிலைகொள்ள வைத்துள்ளது. ரஷ்யாவின் ஒரு எல்லை சீனாவுடன் இருக்கும் நிலையில் அதன் மறு எல்லை , எஸ்டோனியா, லட்வியா, லித்துவேனியா மற்றும் போலந்து ஆகிய நாடுகளோடு உள்ளது.

இந்த 4 நாட்டுடனும் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா நல்லுறவை வளர்த்து அங்கே தமது தளங்களை போட்டுள்ளார்கள். இதனால் ரஷ்யா மேலும் அத்திரமடைந்துள்ளதாக அறியப்படுகிறது. இந்த முறுகல் நிலை காரணமாக மூன்றாம் உலக போர் ஏற்படும் நிலை தோன்றியுள்ளது


« PREV
NEXT »

No comments