Latest News

September 26, 2016

பிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுப்போட்டிகள்
by admin - 0











உலகம் எங்கும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் மக்கள் தமக்கு தமிழீழம் கிடைக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அதற்கேற்ப அதனை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு வகையிலும்இயங்கி வருகின்றார்கள்.
இவ்மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி ஈழத்தமிழரின் ஒற்றுமையையும் பலத்தையும் பன்மடங்கு அதிகரித்து புலத்திலும் ஈழத்தமிழரின் திறமையை நிரூபிக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும்.
 
அதற்கிணங்க புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கக்கூடிய தருணங்களை உருவாக்க வேண்டியது அவசியமானதாகும்.


அவற்றுள் விளையாட்டு என்பது மிகவும் பொருத்தமானதாகவும் சமூகத்தின் எல்லா அங்கத்தவர்களையும் வயது வேறுபாடின்றி ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் இணைத்துக்கொள்ள உதவும் ஒரு சிறந்த மற்றும் பொதுவான ஊடகமாகவும் விளங்குகின்றது.
 
தற்போது உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் மக்கள் விளையாட்டுப்போட்டிகளை தாம்வசித்த கிராமங்கள் மற்றும் பாடசாலைகள் வாரியாக உலகம் தோறும் நடாத்தி வருகின்றார்கள்.

இதனை ஒரு அடித்தளமாகக் கொண்டு எல்லோரையும் ஒருங்கிணைக்கும் வகையிலான பொது விளையாட்டுப் போட்டிகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உலகரீதியாக ஒழுங்கு செய்திருந்தது.

அதன் முதல் கட்டமாக இந்த விளையாட்டுப்போட்டி கனடாவில் நடாத்தப்பட்டது. மேலும் இப்படியான விளையாட்டுப்போட்டிகளை பலவருடங்களாக வடஅமெரிக்காவில் குறிப்பாக நியூயோர்க்கிலும் சென்ற வருடம் பிரித்தானியாவிலும் நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் பிரித்தானிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தியாக தீபம்லெப். கேணல் திலீபன் ஞாபகார்த்தமாக ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தில் விளையாட்டு விழா ஒன்றினை நடாத்த திட்டமிட்டு கடந்த வருடம் முதன்முறையாக வெற்றிகரமாக நடாத்தியமை அனைவரும் அறிந்ததே.
 

இதனைதொடர்ந்து இரண்டாவது தடவையாக இந்த வருடம் 25 செப்டம்பர் 2016 இன்று Morden park, London road, SM4 5HE எனும் இடத்தில் மிகவும் சிறப்பாக தமிழீழ தேசியக்கொடி ஏற்றலுடன் நடாத்தபட்டுள்ளது .


 
இவ்விளையாட்டு விழா பிரித்தானியாவில் வசிக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை மற்றும் சமூக நல உதவிஅமைச்சர் திரு. சொக்கலிங்கம் யோகலிங்கம் தலைமையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மற்றைய அமைச்சர்களினதும் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் மற்றும் நூற்றிற்கும் மேற்பட்ட செயற்பாட்டாளர்களினதும் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடாத்தப்பட்டுள்ளது. இதில் சிறப்பம்சமாக தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.







 
இதில் பெருமளவிலான விளையாட்டு வீரர்கள் மற்றும் தேசிய செயற்பாட்டாளர்கள் என கலந்து கொண்டு சிறப்பித்தனர்






sports


« PREV
NEXT »

No comments