Latest News

September 25, 2016

தமிழரசுக் கட்சியைத் தவிர்த்துவிட்டு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை
பதிவு செய்யவேண்டும். 


by admin - 0

தமிழரசுக் கட்சியைத் தவிர்த்துவிட்டு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை
பதிவு செய்யவேண்டும். 


 
இலங்கைத் தமிழரசுக் கட்சியைப் புறந்தள்ளிவிட்டு வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு  செய்ய வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாக மாறியிருக்கின்றது.

தமிழரசுக் கட்சியின் தமிழர் விரோதப் போக்கிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ போன்ற கட்சிகள் ஆதரவளிக்க மறுப்புத் தெரிவித்துள்ளன
 
பதிவுசெய்யப்படாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்று தன்னைக் கூறிக்கொண்டிருக்கும் சம்பந்தன் ஐயாவும் கூட்டமைப்பின் பேச்சாளர் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கும் சுமந்திரனும் மட்டுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் முடிவுகள் எடுக்கும் அதிகார பீடத்தில் இருக்கின்றனர்.

கட்சியில் உள்ள ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் எதிர்காலக் கதிரைகளைப் பாதுகாப்பதற்காக தலைமைக்கு ஆமாம் போட்டுக்கொண்டிருக்கின்றனர். 

இவர்களில் சிலருக்கு சம்பந்தன் ஐயா மற்றும சுமந்திரனின் செயல்கள் தவறு என்று தெரிந்தும் தமது எதிர்கால நலன் கருதி வாய்மூடி மௌனிகளாக இருக்கின்றனர்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வென்ற இறுமாப்பில் இருந்த தமிழரசுக் கட்சி அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பங்காளிக் கட்சிகளை வெட்டிவிட்டு தனித்துக் களமிறங்குவது என்று முடிவெடுத்திருந்தது. 

ஆனால், நடைபெற்று முடிந்த எழுக தமிழ் தமிழரசுக் கட்சியின் அந்த முடிவில் மண்ணை அள்ளித் தூவியிருக்கின்றது. 

அடுத்த தேர்தலிலும் கூட்டமைப்பு என்ற பெயருடன் களமிறங்கவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. 

இந்த நிலையில், தமிழரசுக் கட்சியின் கொட்டத்தை அடக்குவதற்கு வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில், ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக பதிவுசெய்ய வேண்டும். 

அவ்வாறு பதிவுசெய்வதன் மூலம் மத்திய அரசுடனும் சர்வதேசத்துடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தி  தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வைப் பெறமுடியும். 

அதைவிடுத்து, தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் பொறுப்பை சம்பந்தர் ஐயா மற்றும் சுமந்திரன் ஆகியோரின் பொறுப்பில் விடுவதானது தமிழ் மக்களுக்கு தொடர்ந்தும் அடிமை வாழ்வையே பெற்றுத்தரும்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் பிருந்தாபன் பொன்ராசா

« PREV
NEXT »

No comments