Latest News

September 05, 2016

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வன்னி ஆசிரிய உதவியாளர்களைப் புறக்கணித்துப் பழிவாங்கும் நல்லாட்சி
by admin - 0

01.07.2013 இல் இருந்து தம்மை நிரந்தர ஆசிரியர் சேவையுள் உள்ளீர்ப்புச் செய்து தமக்கான சம்பள நிலுவைகளை வழங்குமாறு வன்னி ஆசிரிய உதவியாளர்கள் கோரிக்கை!

2005 ஆம் ஆண்டு தமக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய நிரந்தர ஆசிரியர் நியமனம் வன்னிப் பகுதியில் வசித்த காரணத்தால் இன்றுவரை தமக்கு வழங்கப்படாதுள்ளதாகக் கூறும் வன்னி ஆசிரிய உதவியாளர்கள், தமக்கு ஆசிரிய உதவியாளர்களாக நியமனம் செய்யப்பட்ட 01.07.2013 ஆம் திகதியிலிருந்து என்றாலும் தம்மை இலங்கை ஆசிரியர் சேவையினுள் உள்ளீர்ப்புச் செய்து அத்திகதியிலிருந்து தமக்கான சம்பள நிலுவைக் கொடுப்பனவுகளை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்து உதவவேண்டும் என கோரிக்கை விட்டுள்ளார்கள்.

வன்னி யுத்தங்களாலும் பெரிதும் பாதிக்கப்பட்ட வன்னி ஆசிரிய உதவியாளர்களாகி தமக்கு கடந்த 2005 ஆண்டு வழங்கப்பட்டிருக்க வேண்டிய ஆசிரியர் நியமனம் இன்று வரை தமக்கு வழங்கப்படாதுள்ளதாகவும் இதனால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறிக் கவலை தெரிவிக்கும் முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற பகுதிகளைச் சேர்ந்த வன்னி ஆசிரிய உதவியாளர்கள் அரசாங்கம் தமக்கு ஆசிரிய உதவியாளர்களாக நியமனம் வழங்கிய 01.07.2013 ஆம் திகதியிலிருந்து தம்மை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்ப்புச் செய்து தமக்கு வழங்கப்பட வேண்டிய சம்பள நிலுவைக் கொடுப்பனவுகளையும் வழங்கி உதவ இலங்கைக் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களால் கோரப்பட்டுள்ளது. 

இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைப் பயிற்சிகளை நிறைவுசெய்துள்ள நிலையிலும் தம்மை இலங்கை ஆசிரியர் சேவையினுள் உள்ளீர்ப்புச் செய்வதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்காது காலங்கடத்தி வருவதாகவும் பாதிக்கப்பட்ட ஆசிரிய உதவியாளர்களால் கூறிக் கவலை தெரிவிக்கப்படுகின்றது.

2006 ஆம் ஆண்டு முதல் அதிபர், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பள நிலுவைக் கொடுப்பனவுகளை வழங்குவதற்காக கல்வி அமைச்சால் 90 கோடி 29 இலட்சம் ரூபா நிதி தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் வன்னியில் இடம்பெற்ற யுத்தங்களாலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரிய உதவியாளர்களாக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டு நீண்ட காலமாக வெறும் 6000 ரூபா சம்பளம் பெற்று வந்த தம்மையும் 2013 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்ப்புச் செய்து தமக்குரிய சம்பள நிலுவைக் கொடுப்பனவுகளை வழங்க இலங்கைக் கல்வி அமைச்சு விரைந்து உதவ வேண்டும் என பாதிக்கப்பட்ட வன்னி ஆசிரிய உதவியாளர்கள் கோரிக்கை விட்டுள்ளார்கள். 
இலங்கையிலுள்ள உள்ள 9 மாகாணசபைகளின் கீழ் சேவையாற்றும் அதிபர், ஆசிரியர்களின் சம்பள நிலுவைக் கொடுப்பனவுக்காக 90 கோடி 29 இலட்சம் ரூபா நிதி வழங்கப்படவுள்ளது.

மேல் மாகாணத்திற்கு 212.77 மில்லியன் ரூபாவும், மத்திய மாகாணத்திற்கு 76.16 மில்லியன் ரூபாவும், வடமத்திய 41.12 மில்லியன் ரூபாவும், வடமேல் மாகாணத்திற்கு 170.94 மில்லியன் ரூபாவும், ஊவா மாகாணத்திற்கு 41.04 மில்லியன் ரூபாவும், தென் மாகாணத்திற்கு 146.80 மில்லியன் ரூபாவும், கிழக்கு மாகாணத்திற்கு 98.88 மில்லியன் ரூபாவும், சபரகமுவ மாகாணத்திற்கு 107.38 மில்லியன் ரூபாவும், வட மாகாணத்திற்கு 7.82 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ள போதிலும் அப்பகுதிகளில் நீண்ட காலமாக மிகவும் குறைந்த சம்பளத்திற்காகச் சேவையாற்றிக் கஸ்டப்படும் அப்பகுதியைச் சேர்ந்த ஆசிரிய உதவியாளர்களை நிரந்தர ஆசிரியர் சேவையினுள் உள்ளீர்ப்புச் செய்யாமல் நல்லாட்சிக்கான அரசாங்கமும் நீண்ட காலமாக ஏமாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
« PREV
NEXT »

No comments