Latest News

September 29, 2016

தமிழக_முதல்வர்_ஜெயலலிதா_உயிருடன்_உள்ளார்
by admin - 0

தமிழக_முதல்வர்_ஜெயலலிதா_உயிருடன்_உள்ளார் !
 
கடந்து சில நாட்களாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக அரசு முதல்வர் நலமாக உள்ளார் என்று அறிக்கை வெளியிட்டது. 

இன்று சமூக வலைத்தளங்களில் பலரும் தமிழக முதல்வர் இறந்து விட்டதாக அவதூறு செய்திகளை பரப்பி வருகின்றனர். இந்த வதந்திகள் குறித்து தமிழக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் தமிழக முதல்வர் தீவிர சிகிச்சை பிரிவில்  மருத்துவர்களின் கண்காணிப்பில் உயிருடன் உள்ளார்.மருத்துவமனை முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது மருத்துவமனை சுற்றி உள்ள சாலை முழுவதும் போக்வரத்து முடக்கி விடப்பட்டுள்ளது இதனால் பொதுமக்கள் மத்தியில் முதல்வர் உடல் நிலை குறித்து பதற்றம் நிலவுகிறது.

மேலும் தமிழக முதல்வர் உடல் நிலை குறித்து வரும் வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் எனவும் அவதூறு செய்திகளை பரப்பி வருபவர்கள் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
« PREV
NEXT »

No comments