Latest News

September 29, 2016

ஜெயலலிதா மரணம்? -தமிழிச்சி தகவல்
by admin - 0

சுவாதி கொலை வழக்கு தொடர்பாக அவ்வப்போது சில தகவல்களை வெளியிட்டு வரும் தமிழச்சி தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.அவரது பதிவு இதோ,

 


தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பே இறந்து விட்டதாக நம்பகமானவர்களிடம் இருந்து தகவல் வருகிறது. இதை சொல்வதற்கும் அசாத்தியமான மனத்திடம் வேண்டி இருக்கிறது. ஒருவேளை இத்தகவல் பொய்யாக இருக்குமானால் என் மீதான விமர்சனங்கள் இனி எவ்வாறாக இருக்கும் என்பதையும் என்னால் உணர முடிகிறது. ஆனால் “நாளை தான் ஜெயலலிதா மரணம் அடைந்தார்” என்று கூறி நாளை அறிக்க வேண்டிய அரசியல் உள்நோக்கத்தை தான் நாங்கள் மக்களிடம் முன்கூட்டியே அறிவிக்க விரும்புகிறோம்.

 

ஒருவேளை ஜெயலலிதா உயிரோடு தான் இருக்கிறார். தமிழச்சி சொன்னது புரளி என்றால் மகிழ்ச்சியே. அப்படி இல்லாமல் நாளை தான் ஜெயலலிதா இறந்தார் என்று அறிவிப்பார்களானால் எனக்கு கிடைத்த நம்பகமான தகவல்களை முன்கூட்டியே நான் அறிவித்ததன் அடிப்படையில் தமிழக மக்கள் விழிப்படைய வேண்டும் என்பதற்காகவே இத்தகவலை உலக தமிழர்கள் முன் வைத்திருக்கிறேன்.

ஒரு மாநிலத்தின் முதல்வருக்கே இந்த கதி என்றால் சாதாரண மக்களின் நிலையை இந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கம் எவ்வாறு கையாளக்கூடும் என்பதை நினைத்தாலே பேரதிர்ச்சியாய் இருக்கிறது.

சுவாதி கொலையில் தொடங்கி, ஓசூர் விஸ்வ இந்து பரிசத் தலைவர் சூரி கொலை,கோவை இந்து முன்னணி சசிகுமார் கொலை, திண்டுக்கல் இந்து முன்னணி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு் தாக்குதல் என அனைத்து விடையங்களிலும், இஸ்லாமியர் மீது பழி போட்டு, இங்கே இந்து -முஸ்லீம் கலவரத்தை உண்டாக்க இந்திய மோடி அரசு துணையோடு ஆர்எஸ்எஸ் முயற்சி செய்து வருகின்றது.

ஆக ஒரு முடிவோடு,இங்கே கலவரத்தை உண்டாக்கியே ஆக வேண்டும் என்ற பதவி வெறியில் தீவிரமாக செயல்பட்டு வரும் பார்ப்பனிய ஆர்எஸ்எஸ், அதற்கு ஒரு தடையாக இருக்கும் முதல்வர் ஜெயலலிதா அவர்களையும் சூட்டோடு சூடாக கொன்று விட்டதோ என்ற ஐயம் ஏற்படுகிறது.

முதல்வர் ஜெயலலிதா அவர்களை சொத்துக் குவிப்பு வழக்கை வைத்து, பார்ப்பனிய ஆர்எஸ்எஸ் மிரட்டி வந்த போதிலும், ஜெயலலிதா தனக்கே உரித்தான தன்னிச்சையாக இயங்கும் குணத்தோடு, இந்த கூட்டத்திற்கு கட்டுப்படாமல் போக முயன்றது தான் முதல்வர் அவர்களின் மரணத்திற்கு காரணமாக இருக்குமோ என்ற கேள்வி எழுகிறது.

ஆக தமிழக முதல்வர் அவர்களின் நிலை பற்றிய தெளிவான தகவலை மக்களிடம் தெரிவிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. இதை எந்த அரசிடம் கேட்பது என்பதுதான் இப்போதைய பெருங்குழப்பம்.

ஒட்டு மொத்த தமிழகமும் பார்ப்பனிய ஆர்எஸ்எஸ், பாஜக,இந்து முன்னணி கும்பலை எதிர்த்து நிற்க வேண்டிய காலம் உருவாகியுள்ளது. தமிழர்களே இப்போதும் விழித்துக் கொள்ளாவிட்டால் பிறகு எப்போது?

« PREV
NEXT »

No comments