Latest News

August 16, 2016

நல்லிணக்க பொறுமுறை தொடர்பில் மக்கள் கருத்தறியும் அமர்வு - வவுனியாவில் கலந்துகொள்ள அழைப்பு
by admin - 0

தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கத்தினால் திட்டமிட்ட ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகள் தொடர்பாகவும், அதன் பாதிப்புக்கள் தொடர்பில் நல்லிணக்க பொறிமுறை தொடர்பில் கருத்து பெறும் செயலணியிடம் முன்வைக்குமாறு வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நல்லிணக்க பொறிமுறை தொடர்பில் மக்கள் கருத்தறியும் முகமாக நியமிக்கப்பட்டுள்ள செயலணியின் மக்கள் கருத்தறியும் அமர்வு நாளை (17.09) வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளது. 

கடந்த பல தசாப்தங்களாக தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இன்படுகொலையால் பாதிக்கப்பட்ட அனைவரும் இதில் கலநச்து கொண்டு தமது கருத்துக்களை பதிவு செய்யமாறு கேட்டுக் கொள்கின்றேன். 

தமிழ் மக்களுக்கு எதிராக திட்டமிட்ட ரிதியில் மேற்கொள்ளப்படகின்ற இராணுவமயமாக்கல், பௌத்தமயமாக்கல், ஆட்களை கடத்துதல், அடிப்படை உரிமைகள் மறுப்பு, முன்னாள் போராளிகளை துன்புறுத்துதல் உள்ளிட்ட துன்பங்களை அனுபவிக்கும் மக்கள் இவற்றை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு சென்று அவர்களின் ஆதரவுடன் ஓரு தீர்வை பெற வேண்டும் என கருதி நிற்கின்றார்கள். அதற்கு முதற்படியாக இங்கு இடம்பெறுகின்ற இவ் அத்துமீறல்களை நாம் ஆவணப்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. அதற்காக இவ் நல்லிணக்க பொறிமுறை தொடர்பில் கருத்து பெறும் அமர்வில் கலந்து கொண்டு உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள்.

நல்லாட்சி, நல்லிணக்கம் என்று கூறிக் கொண்டு இந்த அரசாங்கம் தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதுடன், ஒரு தலைப்பட்சமாகவும் நடந்து வருகின்றது. இதனை நாம் வெளிப்படுத்த அதனை ஆவணப்படுத்தி சர்வதேசம் முன்கொண்டு செல்ல வேண்டியதும் அரசுக்கு முன்வைக்கப் வேண்டியதுமான தேவை உள்ளது.

இதனால் இதனைக் கருத்தில் கொண்டு தமிழ் மக்கள் குழுகுழுக்வாகவோ, தனிநபராகவோ, அமைப்பு சார்ந்த வகையிலோ அதில் கலந்து கொண்டு தமது கருத்துக்களையும் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments