Latest News

August 20, 2016

முன்னாள் போராளிகளது மர்மச்சாவுகள் : விசாரணை செய்யுமாறு ஐ.நாவுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் கோரிக்கை
by admin - 0

முன்னாள் போராளிகளது மர்மச்சாவுகள் : விசாரணை செய்யுமாறு ஐ.நாவுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் கோரிக்கை !

முன்னாள் போராளிகளது மர்மச்சாவுகள் குறித்து விசாரணையொன்றினை நடாத்துமாறு ஐ.நாவிடம் அவசர கோரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் தடுப்பு முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட குறுகிய காலங்களில் 100க்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள் சந்தேகத்துக்குரிய வகையில் சாவடைந்த நிலையில், இக்கோரிக்கையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விடுத்துள்ளார்.

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் செயத் அல் உசேன், ஐ.நாவின் சிறப்பு கடத்தப்பட்டோர் விவகாரங்களுக்கான ஐ.நாவின் சிறப்பு ஆய்வாளர் , உடல்நல விகாரங்களுக்கான ஐ.நாவின் சிறப்பு ஆய்வாளர் , உண்மைக்கு நீதிக்குமான ஐ.நாவின் சிறப்பு ஆய்வாளர் ஆகியோருக்கு இது தொடர்பில் அவசர கடிதங்களை பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அனுப்பி வைத்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைச்சபைத் தீர்மானம் 30.1 1க்கு அமைய, .ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அலுலகம் விசாரணையொன்றினை நடாத்த வேண்டும் என கேட்டுள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன்,  ஊசி மருத்துகள் செலுத்தப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி அளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அவர்களுக்கு அனுப்பியுள்ள அக்கடித்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

தீர்மானம் 30.1 நிறைவேற்றப்பட்டதிலிருந்து,  மறுவாழ்வு என்ற போர்வையில் சிறீலங்காப் படையால் தடுப்புக் காவல் முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த இந்த முன்னாள் போராளிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களில் 100க்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்களால் சாவடைந்துள்ளனர். 

இவர்களுக்கு வலுக்கட்டாயமாக மர்மமான மருந்துகள் ஊசி வழியே செலுத்தபட்டதாகத் தடுப்புக் காவலில் இருந்த சிலர் தெரிவிக்கின்றனர்.  

2015ம் ஆண்டு செப்டெம்பர் ஒஎஸ்ஐஎல் (OISL)  அறிக்கையின் பத்திகள் 370-385 இல், குற்றச்சாட்டு இல்லாமல் முன்னாள் போராளிகள் தொடர்ந்து தடுப்புக் காவலில் இருப்பது 'சர்வதேச நெறிமுறைகளுக்கு முரணானது'  என்பதைக் கண்டுள்ளீர்கள். முன்னாள் போராளிகள் ஆயிரக்கணக்கானோர், குற்றச்சாட்டு எதுவும் இல்லாமல், அவர்களின் தடுப்புக் காவலுக்குத் தெளிவான ஆவணங்கள் இல்லாமல், அவர்களுடைய விடுதலைக்கான எந்த தெளிவான வழிமுறைகளும் இல்லாமல்    தொடர்ந்து தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிவீர்கள். விடுவிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே அவர்கள் சந்தேகத்துக்கு இடமாக சாவடைந்து வருவன குறித்த அண்மைய உறுதியான தகவல்கள் கவலையை அளிக்கின்றன. 

கடந்த ஆண்டு உங்களுடைய விளக்கமான விசாரணையை முடித்த பிறகு, 'உரிமை மீறல்களுக்கும் குற்றங்களுக்கும் பொறுப்பான கட்டமைப்புக்களில் பல, மீண்டும் செயல்படுத்தப்படும் வகையில், அப்படியே இருந்துவருகின்றன' என்ற முடிவுக்கு நீங்கள் வந்தீர்கள். 

நீங்கள் முன்கூடியே அறிவித்தது போல, 2009ல் மோதல்களின் முடிவில் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் மீண்டும் சர்வதேச சட்டத்தை தீவிரமாக மீறி வருகின்றனர் என்பது குறித்து நான் ஆழ்ந்த கவலைகொள்கிறேன். 

தடுப்புக் காவலில் இருந்தவர்கள் விடுதலை செய்யப்பட்ட குறுகிய காலத்திலேயே சாவடையும் வகையில் திட்டமிடப்பட்டு மர்மமான ஊசி மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளமை,  மனிதத்தன்மை அற்ற முறையில் நடத்தப்படுவது குறித்த ஜெனீவா ஒப்பந்தத்தின் பொதுப் பிரிவு 3 மீறப்படுவதை தெளிவாகவே உள்ளடக்கியதாகும்.


உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் உரத்த குரலில் கோரிக்கைகள் எழுந்த பின்னரும், இன்றுவரை சிறீலங்கா அரசாங்கம் இச்சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தத் தவறியுள்ளது. அது விசாரணை நடத்துவதற்குத் தொடர்ந்து தவறி வருவது, பாதுகாப்புப் படைகளின் அனைத்துப் பிரிவுகளுக்கும்  மீறல்களில் ஈடுபடுத்துவதை நிறுத்துமாறு தெளிவாக உத்தரவிடவும், அப்படி மீரியதாகக் குற்றம் சாட்டப்படுபவர்கள் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுத் தண்டிக்கப்படுவார்கள் என்றும் தீர்மானம் 30ஃ1 இன் பத்தி 17 இல் அது ஒப்படைவு செய்துகொண்டுள்ளள்ளதை மீறுவதாகும். 

உங்கள் அறிக்கையின் பத்தி 1278 ல், 'சுதந்தரமான நம்பிக்கைக்குரிய  விசாரணைகளை' நடத்துவதற்கு சிறீலங்காவின் நீதிமுறை இன்னும் தயாராக இல்லை என்று தெரிவித்துள்ளீர்கள், அதனால் எந்த உள்நாட்டு விசாரணையும் நடத்தப்படுவதற்கு முயற்சி எடுக்கப்படுமா என்ற கவலையையும் அது எனக்கு ஏற்படுத்துகிறது. 

ஆகவே, இந்தச் சூழலில் தாங்கள் தலையீடு செய்து,  விசாரணை நடத்தவேண்டும்,  சிறீலங்காப் படையால் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு அவர்கள் விடுதலை செய்யப்பட்ட குறுகிய காலத்தில சாவடையும் வகையில் ஊசி மருத்துகள் செலுத்தப்படுவதைத் தடுத்துநிறுத்தவேண்டும்.

அப்படிப்பட்ட மருந்து செலுத்தப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி அளிக்கப்பட வேண்டும்,  இதையெல்லாம் உறுதிப்படுத்துவதற்கு உங்கள் அலுவலகத்திற்கு உத்தரவிட வேண்டுமென தங்களைக் கேட்டுக்கொள்கிறேன் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள்  அனுப்பிய கடித்தில் தெரிவித்துள்ளார்.

நாதம் ஊடகசேவை


UN Rights Chief Urged to Investigate Suspicious Deaths in Sri Lanka of Recently Released Tamil Prisoners of War: TGTE

Over 100 of these former detainees have died within a short period after their release. Some report having been forcibly injected with unknown substances.

An urgent letter by Transnational Government of Tamil Eelam (TGTE), was sent to the UN High-Commissioner for Human Rights Mr. Zeid Ra’ad al Hussein, urging him to conduct an investigation into the suspicious deaths of over 100 recently released Tamil Prisoners of War (POW), under the mandate set out in the UN Human Rights Council Resolution 30/1. 

“Since the adoption of Resolution 30/1 former Tamil combatants, held in detention camps by the Sri Lankan Army under the guise of rehabilitation, have been released. Over 100 of these former detainees have died of maladies such as cancer within a short period after their release. Some of the detainees report having been forcibly injected with unknown substances.” said the letter. 

“After completing your comprehensive investigation last year you concluded that many of the structures responsible for the violations and crimes remain in place, ready to be reactivated…” I am profoundly concerned that as you predicted, those responsible for the crimes at the end of the conflict in 2009 are again committing serious violations of international law. The injection of substances designed to cause the death of detainees after their release would clearly constitute inhumane treatment in violation of Common Article 3 of the Geneva Conventions,” continued the letter. 

The letter also urges the High Commissioner to “investigate and intervene in this situation to ensure that those who continue to be unlawfully detained by the army are not subjected to treatments designed to cause their death and that any detainees who have received such agents receive immediate medical attention.” 

Letters were also sent to Ban Ki-moon, the UN Secretary-General; Juan E. Mendez, the Special Rapporteur for Torture; Pablo de Greiff, the Special Rapporteur for Promotions of Truth, Justice, Reparation and Guarantees of Non- Recurrence; and Dainius Puras, the Special Rapporteur for Health urging there intervention in this matter.

These letters was sent by Transnational Government of Tamil Eelam’s Prime Minister Mr. Visuvanathan Rudrakumaran.


« PREV
NEXT »

No comments