திமுகவின் ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவா கூட தன் மனைவி சத்தியபாமா கட்சியை மறந்து அன்யோன்யமா இருந்ததாக கணவர் வாசு பகீர் பேட்டியளித்துள்ளார்.
திருச்சி சிவாவும் அதிமுக ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பாவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அப்போது இதை திருச்சி சிவா தரப்பு மறுத்தது.
ஆனால் டெல்லி விமான நிலையத்தில் திருச்சி சிவாவை சசிகலா புஷ்பா சரமாரியாக தாக்கிய போதுதான் இருவருக்குமான நெருக்கம் உலகத்துக்கே அம்பலமானது. இந்த விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதா தம்மை அடித்ததாக ராஜ்யசபாவில் புகார் கூறியதால் சசிகலா புஷ்பா கட்சியைவிட்டே நீக்கப்பட்டார்.
சிக்கலில் அதிமுக எம்பி
இதனிடையே அதிமுகவின் லோக்சபா எம்.பி.யான சத்தியபாமா மீது அவரது கணவரே ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தினார். அத்துடன் விவகாரத்து கோரி நோட்டீஸும் அனுப்பியிருந்தார்.
திருச்சி சிவாவுடன்
இந்த நிலையில் ஜூனியர் விகடன் இதழுக்கு வாசு அளித்த பேட்டியில், 'சசிகலா புஷ்பா, மல்லிகா பரமசிவம், சத்தியபாமா, திருச்சி சிவா எல்லாருமே கட்சியை மறந்து ரொம்ப அன்யோன்யமா இருந்தாங்க... இது சம்பந்தமா நான் அப்பவே அம்மாவுக்கு ஒரு புகார் அனுப்பினேன்.. ஆனா அதை அம்மாகிட்ட கொடுக்கவிடாம தடுத்துட்டாங்க என கூறியுள்ளார்.
சசிகலா புஷ்பா மாதிரி..
சத்தியபாமா விளக்கம்
ஆனால் சத்தியபாமாவோ, ‘குடும்ப விஷயத்தை இப்படி பத்திரிகைகளுக்குச் சொல்றது நல்லாவா இருக்கு. அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லிட்டுப் போகட்டும். நான் யாரையும் குறை சொல்லி எப்பவுமே பேச மாட்டேன். மக்களுக்குச் செய்ய வேண்டிய வேலை ஆயிரம் இருக்கு' என விளக்கமும் கொடுத்திருக்கிறார்.
No comments
Post a Comment