Latest News

August 12, 2016

வன்னி ஆசிரிய உதவியாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க மறுக்கும் கல்வி அமைச்சு.
by admin - 0

வன்னியில் யுத்த காலங்களில் 15 வருடங்களுக்கு மேலாகச் சேவையாற்றிய ஆசிரிய உதவியாளர்களுக்கு சம்பள உயர்வுகளையோ பதவி உயர்வுகளையோ வழங்க மறுக்கும் இலங்கையின் கல்வி அமைச்சு அவர்களின் ஆசிரிய கலாசாலைப் பெறுபேறுகளையும் வெளியிடாது அவர்களை மென்மேலும் துன்பப்பட வைத்துள்ளது.

இவர்களுடன் சமகாலத்தில் சேவையாற்றிய நாட்டிலுள்ள ஏனைய பகுதி ஆசிரிய உதவியாளர்களுக்குச் சம்பள உயர்வுகள், பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ள போதிலும் வன்னி யுத்த காலங்களில் 15 வருடங்களுக்கும் மேலாகச் சேவையாற்றி யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஆசிரிய உதவியாளர்களுக்கு மாத்திரமே இதுவரை சம்பள உயர்வுகளோ, பதவி உறுதிப்படுத்தல்களோ எதுவும் வழங்கப்படவில்லை. 

நாட்டின் ஏனைய பகுதி ஆசிரிய உதவியாளர்களுக்கு வழங்கியது போல தமக்கும் சம்பள உயர்வுகளையும் ஆசிரியர் பதவி உறுதிப்படுத்தல்களையும் வழங்குமாறு கல்வி அமைச்சிடம் பாதிக்கப்பட்ட வன்னி ஆசிரிய உதவியாளர்கள் கோரிக்கை விட்டபோது வன்னி ஆசிரிய உதவியாளர்கள் ஆசிரியர் கலாசாலையில் 2 ஆண்டு ஆசிரிய பயிற்சியை முடித்த பின்னர் அவர்களுக்கு ஆசிரிய உதவியாளர்களாக நியமனம் வழங்கப்பட்ட 2013 ஆம் ஆண்டிலிருந்து சம்பள நிலுவைகளுடன் உரிய சம்பள உயர்வு வழங்கப்படும் என்ற உறுதிமொழிகள் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டபோதிலும் வன்னி ஆசிரிய உதவியாளர்கள் ஆசிரிய கலாசாலைப் பயிற்சியை முடித்து 6 மாதங்கள் ஆகிவிட்ட போதிலும் அவர்களது ஆசிரிய கலாசாலைப் பெறுபேற்றினை வெளியிடாமல் காலங்கடத்தி வருகின்றது.

போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட வன்னி ஆசிரிய உதவியாளர்களின் ஆசிரிய கலாசாலைப் பெறுபேறுகளை வெளியிட்டால் அவர்களுக்கான சம்பள உயர்வு, சம்பள நிலுவைப் பணம், பதவி உயர்வு போன்றவற்றை வழங்க வேண்டும். 
« PREV
NEXT »

No comments