Latest News

August 03, 2016

லண்டன் வீதிகளில் ஆயுதம் தாங்கிய காவற்துறை-பயங்கரவாத தாக்குதல் அச்சம்
by admin - 0

பொதுமக்களின் பாதுகாப்பு கருதி லண்டன் வீதிகளில் ஆயுதம் தாங்கிய பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

லண்டன் மேயர் Sadiq Khan - யின் அறிவுறுத்தலின்படி, உயர் காவல் ஆணையர் Bernard Hogan இதனை அமல்படுத்தியுள்ளார்.

பொது உத்தரவாதம் மற்றும் தீவிரவாத தாக்குதலை தடுத்து நிறுத்துவதே இதன் நோக்கம் ஆகும் என காவல் ஆணையர் கூறியுள்ளார்.

ஆயுதம் தாங்கிய அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என இதற்கு முன்னரே அறிவிக்கப்பட்டது, இதன்படி மொத்தம் 2,8000 பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

நைஸ் நகரில் நடைபெற்ற தாக்குதலில் 84 பேர் கொலை செய்யப்பட்டனர், இந்த தாக்குதலின் எதிரொலியாக இந்த நடைமுறை விரைந்து செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல் ஆணையர் Bernard கூறியதாவது, ஜேர்மன், பிரான்ஸ், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்று வரும் தாக்குதல்களை நாங்கள் கவனத்தில் எடுத்துள்ளோம். 

அதுபோன்று தாக்குதல்கள் பிரித்தானியாவில் நடைபெறுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம், அதனை புறக்கணிக்க வேண்மெனில், ஆயுதம் தாங்கிய பொலிசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

கனரக ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகளை சமாளிப்பதற்காக, லண்டனில் ஆயுதம் ஏந்திய பொலிசாரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி பிரித்தானியாவில் தாக்குதுல் நடத்தப்போகிறோம் என்ற எச்சரிக்கை தொடர்பான செய்திகளில் ஊடகங்களில் வெளியான வண்ணம் இருப்பதால், மக்கள் மத்தியிலும் ஒருவித பயஉணர்வு ஏற்பட்டுள்ளது.

எனவே, தீவிரவாத தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக இந்த நடைமுறையை கையில் எடுத்துள்ளோம் என கூறியுள்ளார்.

  • கடந்த ஜனவரி மாதம் 600 பொலிசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, தற்போது அதன் மொத்த எண்ணிக்கை 2,800 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • வேல்ஸ் மற்றும் இங்கிலாந்து பகுதியில் மட்டும் 1,500 துப்பாக்கி ஏந்திய அதிகாரிகளுக்கு புதிதாக பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது.
  • ஸ்கொட்லாந்தில், ஆயுதம் தாங்கிய வானங்கள் பிரிவில் புதிதாக ஆட்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமன்றி 90 பொலிஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது, இந்த பிரிவில் மொத்தம் 365 பேர் உள்ளனர்.
« PREV
NEXT »

No comments