Latest News

August 02, 2016

கீரிமலை சிவபூமி மண்டபத்தில் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் தலைமையில் சிறப்பு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன
by admin - 0

தெல்லிப்பழை முத்தழிழ் மன்றத்தினரால்  ஆடிஅமாவாசை தினத்திற்கு முதல் நாள்  இரவு (01.08.2016 திங்கட்கிழமை ) கீரிமலை சிவபூமி மண்டபத்தில் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் தலைமையில் சிறப்பு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.
 இச்சிறப்பு கலைநிகழ்வுகளில்  புலவர் பா.மகாலிங்க சிவம் தலைமையில் அருளார்களினால் ஆலயங்கள் புகழ்பெற்றனவா? ஆலயங்களினால் அருளார்கள் புகழ்பெற்றனரா? எனும் தலைப்பில் சிறப்பு பட்டிமண்டபம் இடம்பெற்றது.

இப் பட்டிமன்றத்தில் அருளார்களினால் ஆலயங்கள் புகழ்பெற்றன எனும் தலைப்பில்  தெல்லியூர்சி.கரிகரன்தலைமையில் தெல்லிப்பழை தந்தைசெல்வா தொடக்கநிலைப்பள்ளியின் அதிபர் வாமதேவன், மானிப்பாய் இந்துக்கல்லூரியின் ஆசிரியர் எஸ்.ரி.அருள்குமரன் ஆகியோரும்  ஆலயங்களினால் அருளார்கள் புகழ்பெற்றனர் எனும் தலைப்பில் யாழ்ப்பானம் மத்திய கல்லூரியின் ஆசிரியர் சைவப்புலவர் சித்தாந்தபண்டிதர் செஞ்சொற்வேந்தர் எஸ்.ரி.குமரன் தலைமையில்  ஏழலை ஸ்ரீமுருகன் வித்தியாலய அதிபர் சைவப்புலவர்  ந. பரமேஸ்வரன்  கீரிமலை நகுலேஸ்வரா  மகாவித்தியாலய   அதிபர் தயானந்தன் ஆகியோர் வாதிட்டனர்.

 மேலும் சிறப்பு நாடக அளிக்கையாக அரிச்சந்திரா மயான காண்டம் எனும் இசை நாடகமும் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பெருந்திரளான அடியவர்கள் கலந்து கொண்டார்கள்.
« PREV
NEXT »

No comments