Latest News

August 06, 2016

யாழ்.சதுரங்க முற்றம் நடாத்தும் மிதவேக சதுரங்கச் சுற்றுப்போட்டி.
by Editor - 0

யாழ்.சதுரங்க முற்றம் நடாத்தும் மிதவேக திறந்த சதுரங்கச் சுற்றுப்போட்டி எதிர்வரும் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் புனித பற்றிக்ஸ் வீதியில் அமைந்துள்ள லொயோலஸ் மண்டபத்தில் மு.ப 8.30 தொடக்கம் பி.ப 5.30 வரை நடைபெறவுள்ளது. 

சுவிஸ் தமிழர் சதுரங்க ஒன்றியம் , யாழ்ப்பாணம் லயன்ஸ் கழகம் என்பவற்றின் அனுசரணையுடன் நடைபெறும் இச்சுற்றுப்போட்டியானது ஒரே போட்டியாக நடைபெற்று 8 வயதின்கீழ், 10 வயதின்கீழ், 12 வயதின்கீழ், 15 வயதின்கீழ், மற்றும் திறந்த போட்டி என ஆண், பெண் என தனித்தனியாக 10 பிரிவுகளாக பரிசில்கள் வழங்கப்படவுள்ளது.

ஏழு சுற்றுக்களாக நடைபெறவுள்ள இப்போட்டியில் அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கி 128 பேர் மட்டுமே பங்குபற்ற முடியும். 

பங்குபற்றும் அனைவருக்கும் பங்குபற்றுனர் சான்றிதழ் வழங்கப்படுவதுடன் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களுக்கு வெற்றிக்கிண்ணங்களும், பரிசில்களும் வழங்கப்படும். 

 இப்போட்டிகளில் பங்குபற்ற விரும்பும் வீர்ர்கள் எதிர்வரும் 12ம் திகதிக்கு முன்னர் நுழைவுக் கட்டணத்தினைச் செலுத்தி பதிவுசெய்யுமாறும் , மேலதிக விபரங்களுக்கு போட்டி இணைப்பாளர் கா.ஆதவனுடன் (0777256481) தொடர்பு கொள்ளுமாறும் யாழ் சதுரங்க முற்றத்தினர் அறிவித்துள்ளனர்.
« PREV
NEXT »

No comments