Latest News

August 06, 2016

ரியோ ஒலிம்பிக்கில் முதல் தங்க பதக்கத்தை வென்றது அமெரிக்கா
by admin - 0

ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக் மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் பிரிவில் அமெரிக்கா முதல் தங்கத்தை வென்று அசத்தியது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 31-வது ஒலிம்பிக் திருவிழா இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.30 மணிக்கு கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது. அமெரிக்கா, இந்தியா, சீனா, அமெரிக்கா உட்பட 206 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.


இன்று பெண்களுக்கான 10 மீ்ட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. தகுதிச் சுற்றின் முடிவில் 8 வீராங்கனைகள் இறுதி சுற்றுக்கு முன்னேறினர். இறுதிச் சுற்றில் அமெரிக்கா மற்றும் சீனா வீராங்கனைகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது. இறுதியில் அமெரிக்க வீராங்கனை விர்ஜினியா திராஷர் 108.0 புள்ளிகள் பெற்று தங்க பதக்கம் வென்றார். சீனா வீராங்கனை லீ டு 207.0 புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார். மற்றொரு சீன வீராங்கனை ஷில்லிங் 185.4 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றார்.


« PREV
NEXT »

No comments