Latest News

August 18, 2016

தமிழர் தாயகத்தில் சிங்கள பௌத்த மயமாக்கலை எதிர்த்து 22 ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெறவிருக்கும் நீதிக்கான நடை பயணத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இளைஞரணி அறிக்கை.
by admin - 0

தமிழர் தாயகத்தில் சிங்கள பௌத்த மயமாக்கலை எதிர்த்து 22 ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெறவிருக்கும் நீதிக்கான நடை பயணத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இளைஞரணி அறிக்கை.

திட்டமிட்ட வகையில் மிகவும் சூசகமாக தமிழர் தாயகப் பகுதிகளில் பௌத்த விகாரைகளையும் புத்தர் சிலைகளையும் நிறுவி இராணுவப் பபலத்துடன் தமிழர் தாயகத்தை சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

எமது தாயகப் பிரதேசம் எமக்கே சொந்தமானது. எமது இனத்தின் தனித்துவத்தைக் பாதுகாத்து எமது நிலைத்திருப்புக்கான செயற்பாடுகளை நாமே செய்ய வேண்டும். நாம் அதைச் செய்யத் தவறுவோமானால் எமது தமிழர் தாயகப் பிரதேசம் அனைத்தும் பௌத்த பேரினவாதத்தால் விழுங்கப்பட்டு இறுதியில் எமது தமிழினம் அழித்தொழிக்கப்பட்டு விடும்.

எனவே கிளிநொச்சி மாவட்ட கிராம அபிவிருத்திச்சங்கங்களின் சமாசமும் பொது அமைப்புக்களின் ஒன்றியமும் இணைந்து, ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு நீதி கோரியும் தமிழர் தாயகப் பிரதேசங்களின் சிங்கள பௌத்த மயமாக்கலை எதிர்த்தும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தக்கோரியும் காணாமற்போனோரைக் கண்டறியக்கோரியும் எதிர்வரும் 22.08.2016 திங்கட்கிழமை காலை 7.30 மணியளவில் ஆனையிறவிலிருந்து கிளிநொச்சி ஜ.நா பணியகம் வரை இடம்பெறவுள்ள 'நீதிக்கான நடைபயணத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணி பூரண ஆதரைவை நல்கி இணைந்துகொள்ளவுள்ளது.

இதற்கு மதத்தலைவர்கள் கிராமிய சமூக பொது நிறுவனங்கள் காணாமல் ஆக்கப்பட்டவரிகளின் உறவினர்கள் அரசியல் கைதிகளின் உறவினர்கள் வர்த்தக சங்கங்கள் கூட்டுறவுச்சங்கங்கள் தமிழ்த் தேசியப்பற்றாளர்கள் அரசியல் பற்றாளர்கள் அனைவரையும் அலைகடலெனத்திரண்டு வந்து ஆதரவு தந்து கலந்துகொள்ளுமாறு  பணிவன்புடன் வேண்டுகின்றோம். என அச்செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


சு.சுரேன், T.P.No:- 0773932980
தலைவர்,
இளைஞர் அணி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
கிளிநொச்சி மாவட்டம்.
« PREV
NEXT »

No comments