Latest News

August 18, 2016

பரவிப்பாஞ்சான் மக்களது காணிகள் இரண்டு வாரத்திற்குள் விடுவிக்கப்படும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் உறுதி
by admin - 0

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்களது காணிகள் இரண்டு வாரத்திற்குள் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக ஶ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் கருணாசேன கெட்டியாராட்சியுடன் தொடர்புகொண்ட எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பரவிப்பாஞ்சான் மக்களிடம் தெரிவித்துள்ளார். எதிர்கட்சித் லைவரது கூற்றினையடுத்து பரவிப்பாஞ்சான் மக்களது போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

பரவிப்பாஞ்சான் பகுதி மக்கள் தமது காணிகளைத் தம்மிடமே வழங்குமாறு கோரி கடந்த ஐந்து நாட்களாகப் அவர்களது வாழ்விடங்களிலுள்ள இராணுவ முகாம்களுக்கு முன்னால் இரவு பகலாகத் தங்கியிருந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள். இதனை அறிந்த எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன், ஈ.சரவணபவன் மற்றும் மாகாணசபை உறுப்பினர் சு.சுகிர்தன் ஆகியோருடன் பரவிப்பாஞ்சான் பகுதிக்கு இன்று மதியம் 1.00 மணிக்குச் சென்று மக்களைச் சந்தித்து மக்ளுடன் கலந்துரையாடியதுடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் தொடர்புகொண்டு பரவிப்பாஞ்சான் மக்களது காணி விடுவிப்புக் குறித்துப் பேசியிருந்தார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன கெட்டியாராட்சியின் வாக்குறுதிக்கமைவாக இரண்டு வாராத்திற்குள் பரவிப்பாஞ்சான் மக்களது காணிகள் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உறுதிமொழி வழங்கியதையடுத்து தமது காணிகளுக்கு இரண்டு வாரத்திற்குள் போவோம் என்ற மகிழ்ச்சியில் மக்கள் தமது போராட்டத்தைக் கைவிட்டுள்ளார்கள்.

பரவிப்பாஞ்சானில் தமது காணிகளுக்காகப் போராட்டத்தை முன்னெடுத்த மக்கள் கூறுகையில் எமது சொந்த வாழ்விடங்களுக்காக நாம் இன்றுடன் 5 நாட்களாகப் போராட்டததை முன்னெடுத்து வந்த நிலையில் எமது நிலைய அறிந்து இவ்விடத்திற்கு வருகை தந்த இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் எமது கோரிக்கையை ஏற்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன கெட்டியாராட்சியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு எமக்கு முன்னாலேயே எமது காணி விடுவிப்புக் குறித்துப் பேசியிருந்தார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளரது உறுதிமொழியையடுத்து எமது காணிகள் இரண்டு வாரத்திற்குள் எம்மிடம் கையளிக்கப்படும் உறுதியளிக்கப்பட்டமையை அடுத்து நாம் எமது போராட்டத்தைக் கைவிட்டுள்ளோம். எமது சொந்த வாழ்விடங்களுக்கு இரண்டு வாரங்களில் நாம் செல்லவுள்ளதனை நினைக்க எமக்கு மிகுந்த மகிழ்ச்சியாகவுள்ளது என்றனர்.
« PREV
NEXT »

No comments