Latest News

August 25, 2016

லண்டனில் 800 ஆயிரம் பவுண்டுகளை ஆட்டையைப் போட்ட தமிழ் – சிங்கள மாணவர் திடீர் கைது
by admin - 0

லண்டனில் உள்ள ரக்பி விளையாட்டு கழக வங்கியில் இருந்து, மிகவும் நுட்ப்பமாக £789,000 ஆயிரம் பவுண்டுகளை வேறு வங்கிக்கு மாற்றி. பின்னர் தனை தன்னுடைய வங்கிக்கு மாற்றி ஆட்டையைப் போட்ட இலங்கை மற்றும் இந்திய தமிழர்களை பிரித்தானிய ஸ்காட்லன் யாட் ரகசியப் பொலிசார் மடக்கிப் பிடித்துள்ளார்கள். இந்த திடுக்கிடும் தகவல் தொடர்பாக அதிர்வின் பிரித்தானிய புலனாய்வு செய்தியாளர் திரட்டியுள்ள தகவல்கள் இதோ…


பிரித்தானியாவுக்கு வணிகம் தொடர்பான மேல்படிப்பை படிக்க வெற்றி என்ற இளைஞர் வந்துள்ளார். மேலும் பிரித்தானியாவில் காய்கறி கடை ஒன்றில் வேலைசெய்யும் இந்திய தமிழரான சுவாமி நாதனும் இத்திருட்டில் இணைந்துள்ளார். எக்ஸ்டர் என்னும் மாநகரில், எக்ஸ்டர் ரக்பி விளையாட்டுக் கழகம் உள்ளது. அவர்களது வங்கிக் கணக்கில் பல மில்லியன் பவுண்டுகள் உள்ளது. இதில் இருந்து £789,000 ஆயிரம் பவுண்டுகளை(8 கோடி இந்திய ரூபா) ஒரு நபர் இன்ரர் நெட் பாங்கிங் ஊடாக மாற்றியுள்ளார். இன் நபர் யார் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இவரே இதன் சூத்திரதாரியும் ஆவார். மிகவும் பாதுகாப்பான லொயிட்ஸ் வங்கியின் இன்ரர் நெட் பாங்க் ஊடாக இந்த பணத்தை முதலில் வெளியே எடுத்து. அதனை வேறு வங்கிக் கணக்கு ஒன்றுக்கு மாற்றியுள்ளார்கள்.

அதன் பின்னர் வெற்றி மற்றும் சுவாமி நாதன் ஆகியோர் தலா வங்கிக் கணக்குகளை திறந்து, குறித்த காசை பிரித்து இந்த வங்கிக் கணக்கில் போட்டு. பின்னர் £50,000 ஆயிரம் £80,000 என்று சிறிய தொகையாக அதனை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளார்கள். அதிலும் குறிப்பாக சிங்கப்பூருக்கு அனுப்பியுள்ளார்கள். எக்ஸ்டர் வங்கிக் கணக்கில் இருந்து பெருந்தொகைப் பணம் காணாமல் போனதை அடுத்து அதன் மேனேஜர் பொலிசாரிடம் முறையிட. இந்த விசாரணையை ரகசியப் பொலிசார் நடத்த ஆரம்பித்துள்ளார்கள். அவர்கள் நடத்திய விசாரணையில், சுவாமி நாதன் மற்றும் வெற்றி ஆகியோர் சிக்கிகொண்டுள்ளார்கள். ஆனால் இவர்கள் இருவரும் குற்றத்தை ஒப்புக்கொள்ள வில்லை. தமக்கு தெரியாமல் , யரோ தம் பெயரில் வங்கிக் கணக்கை திறந்து இவ்வாறு ஏமாற்று வேலை செய்துள்ளார்கள் என்று இவ்விருவரும் கடைசி வரை வாதாடியுள்ளார்கள். ஆனால் 7 பேர் அடங்கிய யூரிகள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

 ஏன் என்றால் இவர்கள் வங்கிக் கணக்கை திறந்த ஆதாரத்தை பொலிசார் சமர்பித்துள்ளார்கள்.இந் நிலையில் வெற்றி என்ற இலங்கை மாணவனுக்கு விசா முடிந்தும், அதன் பின்னரும் பிரித்தானியாவில் அவர் தங்கியிருந்து இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது பெரும் குற்றமாக கருதப்பட்டு. அவருக்கும் 22 மாதச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தண்டனை முடிந்த பின்னர் அவரை உடனடியாக நாடு கடத்துமாறு, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த விடையத்தை நாம் எழுதும் வேளையில் பல தகவல்கள் வந்தவண்ணம் உள்ளது. அதாவது லண்டனில் பல ஏஜண்டுகள் உலாவருவதாகவும். அவர்கள் குறிப்பாக விசா இல்லாத மற்றும் மீண்டும் நாட்டுக்குச் செல்ல உள்ள ஆட்களை அணுகி. உங்கள் பெயரில் வங்கிக் கணக்கு ஒன்றை திறவுங்கள் என்றும். அப்படி திறந்தால் நாம் நிறையக் காசை அதில் போடுவோம். காசை வெளியே எடுப்பது உங்கள் பொறுப்பு ஆனால் அதில் 70 விகிதத்தை எமக்கு தரவேண்டும் என்று ஆசை காட்டி வருகிறார்கள். இது வெறும் 100 அல்லது 1000 பவுண்டுகள் மேட்டர் அல்ல. எல்லாமே 300,000 ஆயிராம் 500,000 ஆயிரம் பணமாற்று தான். 100,000 பவுண்டுகளை எடுத்துக் கொடுத்தால் 30,000 பவுண்டுகள் உங்களுக்கு வரும் என்று இவர்கள் பல தமிழர்களுக்கு ஆசைகாட்டி வருகிறார்கள். இவர்கள் வலையில் சிக்கினால் பெரும் படு குழியில் தான் விழுவீர்கள். பிரித்தானியப் பொலிசார் ஒன்றும் மூடர்கள் அல்ல. எந்த நாட்டுக்குச் சென்றாலும் அவர்கள் உங்களை கண்டு பிடிப்பார்கள் என்பதனை மறக்கவேண்டாம். இதில் மாட்டிக் கொள்வது நீங்கள் தான். குறித்த ஏஜண்டுகள் மற்றும் பணத்தை மாற்றும், கணனி நுட்ப்பவாதிகள்(Bank Hackers) எப்பொழுதும் சிக்கிக்கொள்வது இல்லை. இதில் சில Bank Manager களும் பிராடு(Fraud) தனத்தில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்களும் சிக்கிக் கொள்வது இல்லை.



thanks athirvu
« PREV
NEXT »

No comments