Latest News

August 25, 2016

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஐநா நோக்கிய ஈருருளிப் பயணம்
by admin - 0

*தமிழின அழிப்புக்கு பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தியும் ஒற்றையாட்சியை நிராகரித்தும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஐநா நோக்கிய ஈருருளிப் பயணம் !!!*

நடைபெற இருக்கும் ஐநா மனிதவுரிமை சபையின் 33 வது அமர்வை முன்னிட்டு தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஐநா நோக்கி மனிதநேய ஈருருளிப் பயணம் எதிர்வரும் 11.09.2016 ஞாயிற்றுக்கிழமை பிரித்தானிய பிரதமர் காரியாலயத்துக்கு (10 Downing Street) முன்னராகவிருந்து ஆரம்பிக்கப்பட்டு மனிதநேய ஈருருளிப் பயணம் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் செயலகம் நோக்கி செல்ல இருக்கின்றது.

ஈருருளிப் பயணம் செல்லும் வழிகளில் முக்கிய அரசியல் சந்திப்புகள் இடம்பெறுவதோடு , தமிழின அழிப்பை பல்லின மக்களுக்கு எடுத்துரைக்கும் துண்டுப்பிரசுரங்களும் , விளக்கங்களும் கொடுக்கப்படும் . எமக்கான நீதியை நாம் பெறும் வரை ஐநா நோக்கிய பயணம் என்றும் ஓயாது என்பதின் குறியீடாக இம் முறையின் மனிதநேய ஈருருளிப் பயணம் அமைகின்றது.

தாயகத்தில் எங்கள் உறவுகள் எதிரியின் ஆக்கிரமிப்புக்குள் அடிமைப்பட்டு வாழ்ந்து வருகிறார்கள். எங்களை அழித்தவன், எங்கள் பாரம்பரியத்தை, கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை, எங்கள் தொன்மையான தூய தமிழ்மொழியை படிப்படியாக நுட்பமாகத் திட்டமிட்டு தொடர்ந்து அழித்து வருவதோடு, எங்கள் நிலத்தையும் நிரந்தரமாக வன்கவர்ந்து தன்னகப்படுத்தி வருகிறான்.

பத்து அல்லது இருபது ஆண்டிற்குள் தமிழரின் பூர்வீக தாயக நிலத்தில் தமிழர்கள் உரிமைகூற ஏதுமற்ற நிலை உருவாகக்கூடிய ஓர் இரகசிய செயற்றிட்டத்தில் சிங்கள பௌத்த பேரினவாத அரசு தீவிர முனைப்புக்காட்டி வருகிறது. இவ்வாறான ஒரு பாரிய திட்டமிட்ட மென்தீவிர இனவழிப்பு எம்மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

இவ்வாறு திட்டமிடப்பட்ட ஒரு மென்தீவிர இனவழிப்பிலிருந்து எமது உறவுகளை, எமது தாய்நிலத்தை, மொழியை, தமிழரின் கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை பாதுகாக்க நாம் என்ன செய்யப்போகிறோம்?

உலகெங்கும் தமிழர்கள் வாழ்கின்ற நாடுகளில் தமிழர்கள் ஓரணியாக எழுச்சிபெற்று சக்தி வாய்ந்த போராட்டங்களைச் செய்யவேண்டும். நீதியின் கதவுகள் திறக்கப்படும்வரை நாம் ஓய்ந்துவிடாது தொடர்ந்து எங்கள் உரிமைக்காக ஓங்கிக் குரலெழுப்ப வேண்டும். இளைஞர்கள் போராட்டத்தில் குதிக்கவேண்டும். தமிழ் எங்கள் உயிருக்கு நிகர், எங்கள் மொழி, எங்கள் இனம், எங்கள் பண்பாடு – உலகிலேயே மிகவும் தொன்மையானது, வீரமானது, தனித்துவமானது!

ஆகவே, எமது உரிமைகளை மீட்டெடுக்கும் வரை நாம் தொடர்ந்து முனைப்போடு போராடுவோம்!

செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் மகத்தான சரித்திரம் படைத்த நாள். உலகின் முதன்முதல் சாத்வீகப்போராட்டத்தில் உச்சக்கட்டமான நீராகாரம் கூட அருந்தாமல் சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டு உயிர் துறந்த தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் நினைவு நாள்.

ஐரோப்பா எங்கும் வாழ்கின்ற தமிழர்கள் யாவரும் 26. 09. 2016 அன்று ஐ.நா. வாசல் நோக்கி அணிதிரள்வோமாக! ஒன்றுபட்ட தமிழரின் எழுச்சியாக, எங்கள் பூர்வீக நிலம், இனம், மொழி, கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை பாதுகாப்பதற்காக, எம்மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள மென்தீவிர இனப்படுகொலையிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக ஐரோப்பா எங்கும் வாழ்கின்ற தமிழர்கள் நாம் அணிதிரண்டு, ஓரணியாக நின்று எமக்காக நீதி கோரும் ஒரு சக்திவாய்ந்த போராட்டமாக மாற்றுவோமாக! 65 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் எமது உரிமைப் போராட்டத்தில் தமிழீழ தேசத்தை வென்றெடுக்க தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரச் செல்வங்களின் நினைவோடு தமிழீழமே எமது இறுதித் தீர்வு என ஒன்றுகூடுவோம்.

காலத்தின் கட்டாய வரலாற்றுக் கடமையை உணர்ந்து பிரித்தானியா எங்கும் வாழ்கின்ற தமிழ் உறவுகள் அனைவரும் பேரணியாக ஒன்றுகூடுமாறு மிகவும் பணிவன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறோம்.

-மேலதிகத் தொடர்புகளுக்கு

திருக்குமரன்  (நாடுகடந்த தமிழீழ அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர், மாவீரர் மற்றும் போராளி குடும்ப நலன்காப்புச் செயலாளர் பிரித்தானியா) 07588470943

Coordinators 
Yogi TGTE MP -
Ahilan TGTE MP - 
கார்த்திக் - 07427681476
வசந்தி      - 07390060388
பிரியா       - 07459667014
 
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரித்தானியா.
Facebook - TGTE UK
Viber - TGTE UK
WhatsApp - TGTE UK  
www.tgte.org

நன்றி

*தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்*
« PREV
NEXT »

No comments