Latest News

June 20, 2016

தமிழர்கள் என்பதால் மகிந்த வழியைப் பின்பற்றும் மைத்திரி! ஆசிரிய உதவியாளர் விடயத்தில்.
by admin - 0

இலங்கையில் 6000 ரூபா மட்டடும் மாதச் சம்பளம் பெறும் ஆசிரிய உதவியாளர்களாக எத்தனை சிங்களவர்கள் இருக்கிறார்கள்? என்று கேட்டால் தேடித்தான் பார்க்கவேண்டும் அப்படிக் குறைந்த அதிலும் இந்தக் காலத்தில் வெறும் ஆறாயிரம் ரூபா மாதச் சம்பளம் பெறும் சிங்களவர்கள் எவருமே இல்லை. 

இந்நிலையில் இனவாத நோக்கம் கருதி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் தமிழர்களை அடிமைப்படுத்த்தி அடிபணிய வைப்பதற்காக கொண்டுவரப்பட்ட வெறும் 6000 ரூபா மாதச் சம்பளத்திற்கு ஆசிரிய உதவியாளர் என்னும் அரச உத்தியோகத்தை நல்லாட்சி நடத்துவதாகக் கூறும் மைத்திரி அரசாங்கமும் அப்படியே ஏற்றுக்கொண்டு தமிழர்கள் விடயத்தில் கடைப்பிடித்து வருகின்றது. எப்படியான நல்லாட்சி ஏற்பட்டாலும் தமிழர்கள் என்றைக்கும் அடிமைகளாகவேதான் நோக்கப்படுவார்கள் என்பதையே இது மிகத் தெளிவாக வெளிப்படுத்தி நிற்கின்றது.

ஊழல் நிறைந்த அடாவடித்தனமான ஆட்சி என்று கூறப்படும் மகிந்த ஆட்சி முடிவடைந்து மைத்திரி நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டு இரண்டு வருடங்கள் ஆகிவிட்ட நிலையிலும், தமிழர் ஒருவர் கல்வி அமைச்சராக இருக்கின்ற போதிலும் தமிழர்களாகவுள்ள ஆசிரிய உதவியாளர்கள் தற்போதும் வெறும் 6000 ரூபா சம்பளத்திற்கு அரசின் அடிமைகளாகவே கணிக்கப்படுகின்றார்கள். ஆசிரிய உதவியாளர்களாகவுள்ள தமிழர்களை மகிந்த ஆட்சியைத் தொடர்ந்து மைத்திரி நல்லாட்சியும் ஏமாற்றி அவர்களின் உழைப்பைக் கொள்ளையடித்து ஆசிரிய உதவியாளர்கள் குடும்பங்களைத் துன்பத்தில் துடிக்கவிட்டுள்ளது. மைத்திரியின் நல்லாட்சி அரசாங்கம்.

இம்முறை புதுவருடப்பிறப்புக்கு புத்தாடை வாங்கக்கூட பணமில்லாமல் மலையகத்திலுள்ள ஆசிரிய உதவியாளர்கள் துன்பப்பட்டமையும் குடும்பச் செலவுகளைச் செய்யமுடியாது துன்பப்பட்டு துடிக்கின்றமையும் அனைவருக்கும் தெரிந்தநிலையிலும் எவருமே ஆசிரிய உதவியாளரது நியமனத்தை இலங்கை ஆசிரியர் சேவை தரம்-3-11 இல் உள்ளீர்ப்புச் செய்து அதற்கேற்ற சம்பளத்தைச் பெற்றுத்தர விருப்பமின்றியுள்ளார்கள்.

ஆசிரிய உதவியாளர்களாகவுள்ளவர்களுக்கு மாதந்தம் வெறும் 6000 ரூபா மட்டுமே சம்பளமாக தரப்படுகின்றது. ஆசிரிய உதவியாளர்களுக்கு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சிக்காக மலையகத்திலிருந்து யாழ்ப்பாணம் கோப்பபய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கு பெருமளவானவர்கள் வந்து தங்கி நின்று பயிற்சி பெறுகின்றார்கள் இந்த ஆசிரிய உதவியாளர்களின் செலவு விபரம்:-

தங்குமிட றூம் வாடகை-         2500 ரூபா 
மூன்று வேளை உணவுச் செலவு-   9000 ரூபா
போக்கு வரத்து ஏனைய செலவுகள்- 5000 ரூபா
                          ------------------
மோத்தச் செலவு-              16,500 ரூபா
                          ------------------
இதனைவிட ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் விழாக்கள், புத்தகங்கள் போன்ற ஏனைய செலவுகளும் உண்டு அவை இதற்குள் சேர்க்கப்படவில்லை.
இதற்கு அப்பால் இந்த ஆசிரிய உதவியாளர்களின் குடுமத்பங்களும் இவர்களின் வருமானத்தை நம்பியே வாழ்கின்றன.
ஆசிரிய உதவியாளர் பணியில் உள்ள ஒருவர் வெறும் 6000 ரூபா மாதச் சம்பளத்தைப் பெற்று தனது ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் தங்கி நின்று பயிற்சி பெறும் ஒருமாதத்திற்குரிய  குறைந்தபட்ச 16,500 ரூபா செலவை எப்படிச் செய்யமுடியும்?
இவ்விடயம் குளிரூட்டப்பம்ட ஏ.சி வாகனங்களில் சொகுசாகப் பயணிக்கும் ஜனாதிபதி உட்பட்ட அமைச்சர்களுக்கு எங்கே தெரியப்போகிறது? 
இவ்விடயத்தில் ஆசிரியர் சங்கங்கள்கூட ஆக்கபூர்வமான நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளாமல் சும்மா ஒரு அறிக்கையளவில் தமது கடமை முடிந்துவிட்டதாக மௌனமாக இருந்துவிடுகின்றன. ஆசிரிய உதவியாளர்களாக பணியிலுள்ளவர்கள் தமிழர்கள் என்பதாலோ தெரியவில்லை ஆசிரியர் சங்கங்கள் பெரும்பான்னை இனத்தவர்களைத் தலைவர்களாகக் கொண்டனவாக காணப்படுகின்றமையாலோ என்னவோ தெரியவில்லை என பாதிக்கப்பட்ட ஆசிரியர் உதவியாளர்கள் குறைப்பட்டுக்கொள்கின்றார்கள்.

ஆசிரிய உதவியாளர் பதவி என்பதே இலங்கை ஆசிரியர் சேவைப் பிரமாணங்களுக்கு முற்றிலும் முரணான விதிமுறைகளை மீறியதாகக் காணப்படுகின்றபோதிலும் தமிழர்களை வாட்டிவதைப்பதற்காக மைத்திரி நல்லாட்சி அரசாங்கமும் அதனைப் பின்பற்றி வருகின்றது.

நாட்டில் தமது வாழ்க்கைக்காகக் கஸ்டப்படும் 5000 தமிழ் ஆசிரிய உதவியாளர்களை அரசாங்கம் நினைத்தால் விரும்பினால் நாளையே ஆசிரியர் Nவைக்குள் உள்ளீர்த்துச் சம்பளத்தை ஆசிரியர் சேவைக்கமைவாக வழங்கலாம் ஆனால் அதனை அரசாங்கம் செய்யாது ஏனென்றால் ஆசிரிய உதவியாளர்கள் தமிழர்களாகக் காணப்படுகின்றார்கள்.

பாதிக்கப்பட்ட ஆசிரிய உதவியாளர்கள்.

« PREV
NEXT »

No comments