Latest News

June 03, 2016

தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை மீண்டும் நீடித்தது அமெரிக்கா
by admin - 0

தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை மீண்டும் நீடித்தது அமெரிக்கா.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி வலையமைப்பு இயக்க நிலையிலேயே தொடர்ந்தும் காணப்படுகின்றது எனவும் இதனால் புலிகளின் மீதான தடையை நீடிப்பதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டு போர் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் இலங்கையில் எந்தவிதமான தாக்குதல்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொள்ளவில்லை.

எனினும், இந்தியாவில் அமைந்துள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சித்தவர்கள் உள்ளிட்ட 13 தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் கடந்த 2014ம் ஆண்டு மலேசியாவில் கைது செய்யப்பட்டனர்.

மேலும், 2015ம் ஆண்டில் இந்தியா மற்றும் மலேசியாவில் ஏனைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.



« PREV
NEXT »

No comments