Latest News

June 05, 2016

மக்களின் மனம் அறியாது உறுப்பினர்களின் செயற்­பாடு - வடக்கு முத­ல­மைச்சர் சி.வி.குற்றச்சாட்டு
by admin - 0

வட­மா­காண மக்­களின் மனம் அறி­யாது நிலை அறி­யாது உறுப்­பி­னர்கள் பலர் செயற்­பட்டு வரு­கின்­றார்கள். செய்ய வேண்­டிய வேலைகள் இருக்கும் போது சிறு­பிள்­ளைத்­த­ன­மான பல நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­கின்­றார்கள். அமைச்­சர்­களைப் பற்றி அவ­தூ­று­களை எடுத்து விளம்­பவே சபையைப் பாவிக்கப் பார்க்­கின்­றார்கள். பல நன்­மை­களை எதிர்­பார்த்து மக்கள் இருக்­கின்­றார்கள். அதற்­காகப் பாடு­ப­டாது எதிர்­ம­றை­யான காரி­யங்­க­ளி­லேயே சிலர் தம் காலத்தைக் கழிக்­கின்­றார்கள் என வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்கி­னேஸ்­வரன் குற்றம் சாட்­டி­யுள்ளார்.

புதுக்­கு­டி­யி­ருப்பு தேவி­புரம் பகு­தியில் புது வசந்தம் தையல் நிலைய திறப்பு விழா நேற்று வெள்­ளிக்­கி­ழமை காலை நடை­பெற்­றது. அந்­நி­கழ்வில் பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே தனது உரையில் சில உறுப்­பி­னர்கள் மீது குற்­றச்­சாட்டை முன் வைத்தார்.

முத­ல­மைச்சர் தனது உரையில் மேலும் தெரி­விக்­கையில் ,
முல்­லைத்­தீவு மக்­க­ளுக்கு ஏற்­படும் நன்­மை­களை நாங்கள் முற்­றிலும் வர­வேற்­கின்றோம். முல்­லைத்­தீ­வி­லி­ருந்து அமைச்சர் ஒருவர் இல்­லாத குறையை நாங்கள் உணர்ந்து செயற்­பட்டு வரு­கின்றோம்.

நீண்ட கால யுத்­தத்தின் விளை­வாக இப்­ப­கு­தியில் பல பாதிப்­புக்கள் ஏற்­பட்­டன. 2009ஆம் ஆண்டு இக்­கா­லப்­ப­கு­தியில் உயிர்ச்­சேதம், பொருட்­சேதம் என பல பாதிப்­புக்­களை மக்கள் அனு­ப­வித்­தார்கள். அனைத்­தையும் இழந்து நிர்க்­க­தி­யாக வாழ்ந்து வந்த இம் மக்­களில் ஒரு சில­ருக்கு வாழ்வில் ஒரு நம்­பிக்கை ஒளியை ஏற்­ப­டுத்தக் கூடிய வகை­யி­லேயே இன்று இந்த தையல் நிலையம் திறந்­து­வைக்கப் பட்­டுள்­ளது.

எமது அர­சி­ய­லுக்கும் மேலாக இந்த மக்­களை எப்­படி சரா­சரி மனி­தர்­க­ளாக சமு­தா­யத்தில் ஓர் அங்­க­மாக அவர்­களை மாற்­றலாம் என்றே அல்லும் பகலும் பாடு­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்றோம்.

ஆனால் நாங்கள் எவரும், எல்­லோரும் கொண்­டு­வரும் பொரு­ளா­தார முன்­மொ­ழி­வு­களை உடனே ஏற்­றுக்­கொள்ள மாட்டோம்.
எமது கருத்­து­ரை­யா­ளர்­களின் கருத்­த­றிந்தே இதைச் செய்­கின்றோம்.

இதனால் எம்மால் பல­வி­த­மான விமர்­ச­னங்­களை எதிர்­நோக்க வேண்­டி­யுள்­ளது.
எமது மக்­களின் மனம் அறி­யாது நிலை அறி­யாது உறுப்­பி­னர்கள் பலர் செயற்­பட்டு வரு­கின்­றார்கள். செய்ய வேண்­டிய வேலைகள் இருக்கும் போது சிறு­பிள்­ளைத்­த­ன­மான பல நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­கின்­றார்கள்.
எமது அமைச்­சர்கள் மீது குற்றச் சாட்­டுக்கள் ஏதா­வது இருந்தால் எழுத்தில் ஆதா­ரத்­துடன் தந்தால் உடனே உரிய நட­வ­டிக்­கைகள் எடுப்பேன் என்று கூறிய பின்­னரும் சபையில் நம்­பிக்­கை­யில்லாத் தீர்­மா­னங்­களைக் கொண்­டு­வரத் தயா­ரா­கின்­றார்கள்.

ஒரு­வரின் குற்­றங்கள் கையு­யர்த்தி ஏற்­கப்­படும் விட­யங்கள் அல்ல. தாருங்கள் நான் உரி­ய­வர்­களைக் கொண்டு விசா­ரித்து நட­வ­டிக்கை எடுக்­கின்றேன் என்றால் எதையும் என்­னிடம் கைய­ளிக்­காமல் சபையில் சாட விரும்­பு­கின்­றார்கள்.

அமைச்சர்களைப் பற்றி அவதூறுகளை எடுத்து விளம்பவே சபையைப் பாவிக்கப் பார்க்கின்றார்கள். பல நன்மைகளை எதிர்பார்த்து மக்கள் இருக்கின்றார்கள். அதற்காகப் பாடுபடாது எதிர்மறையான காரியங்களிலேயே சிலர் தம் காலத்தைக் கழிக்கின்றார்கள் என்­றார்.
« PREV
NEXT »

No comments