Latest News

May 03, 2016

நான் இலங்கை சென்றால் கொல்லப்படலாம், குளிக்க சென்றபோது சுறா மீன் என்னை தின்று விட்டதுஎன்று அரசாங்கம் கூறும்: மாதங்கி அருட்பிரகாசம்
by admin - 0

ஈழத்தை பூர்விகமாக கொண்டுள்ள உலகப் புகழ் பெற்ற பிரபல ரப்பாடகி மாதங்கி அருள்பிரகாசம் (மாயா) லண்டனில் வெளிவரும் வாரஇதழொன்றுக்கு (ES Maggasine -22.04.2016 ) அண்மையில் அளித்த பேட்டியொன்றில் தனது ஈழம் பற்றிய நினைவுகளையும் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களையும் மீண்டும் ஒருமுறை பதிவு செய்துள்ளார்.

ஆதில் அவரைப் பேட்டி கண்டவரான திரு ரிட்சாட் கொட்வின் “எது அவரை (மாயாவை) பயம் கொள்ளச் செய்யும்” என்ற ஒரு வினாவுக்கு தாமதியாமல் “எதுவுமில்லை.ஏனெலில் நான் என்றோ இறந்திருக்க வேண்டியவள். உண்மையிலும் உயிரோடு இருப்பது அதிஸ்டவசமானது, நான் போரிலிருந்து வந்தவள். அங்கு நான் வாழும் பொழுது 25 வயதைத் தாண்டி வாழ்வேன் என்று எண்ணவில்லை. நான் ஒருபொழுதும் பெரியவளாக வருவேன் என்றோ, ஒரு குழந்தைக்கு தாயாவேன் என்றோ, வீடு வைத்திருப்பேன் என்றோ நினைக்கவில்லை ” என்று கூறியுள்ளார். அத்துடன் தனது யாழ்பாண வாழ்வின் இளமைக்காலத்தில் அயலவர்களின் பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடியதையும் நியூயோர்க்கில் தனது மகன் 2 வயதிலிருந்து தனியறையில் படுப்பது போலல்லாது தனது 10 வயது வரையும் ஏறக்குறைய 10 பேர்கள் தூங்குகின்ற இடத்தில் தான் தூங்கிய காலங்களையும் நினவு கூர்ந்துள்ளார்.



மேலும் தான் அண்மையில் தமிழ் நாட்டில் அகதி முகாம்களில் வாழ்கின்ற ஈழத்த்மிழர்களச் சென்று சந்தித்ததாகவும் தன்னைப் பொறுத்தவரையில் அவர்களுடைய பிரச்சினைகள் தன்னுள்ளே என்றும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்துள்ளதுடன், “என்னதான் இலங்கையரசு தற்பொழுது பிரச்சினைகள் யாவும் தீர்ந்துவிட்டதகவும், வந்து பார்க்கும்படி கூறினாலும் நான் அந்த ஆபத்தை எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. எனக்கு ஒரு பிள்ளை இருக்கிறது. இலங்கை அரசு செயற்படுகின்ற விதத்தில், நான் கொல்லப்படலாம். அதற்கு இலங்கை அரசு, அவர் குளிக்க போனார் , அவரை சுறா மீன் தின்று விட்டது . இதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்று கேட்கும்” என்று கூறியுள்ளர்.

யுத்தம் நடைபெற்ற காலங்களில் தமிழ் மக்களின் போராட்டத்தின் நியாயத் தன்மைகளை எந்தவித தயக்கமும் இன்றி சர்வதேச ஊடகங்களுக்கு எடுத்துக்கூறி வந்தவர் மாயா. அத்துடன் இறுதி யுத்தம் நடைபெற்ற காலங்களில் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டபோதும் தன்னால் முடிந்தளவுக்கு அவற்றை வெளி உலகத்துக்கு தெரியப்படுத்தினார். இவை காரணமாக இலங்கை அரசாங்கம் அவரை ஒரு ஒரு பயங்கரவாத அமைப்பின் ஆதரவளர் என்று முத்திரை குத்தியதுடன் அவருக்கு எதிரான பிராசரங்களையும் முன்னெடுத்திருந்தது.

இந்த சஞ்சிகை மாயாவின் வாழ்க்கை பற்றிய பல தகவல்களையும் குறிப்பிடுகின்றது. 1975ல் லண்டனிலுள்ள ஹவுன்சலோ என்ற இடத்தில் பொறியியலாளரான அருள்பிரகாசம் மற்றும் தையல்ப் பணி செய்கின்ற கலா தம்பதிகளுக்கு மகளாக மாயா பிறந்தார். அவர் கைக் குழந்தையாக இருக்கும் பொழுது பெற்றோர்கள் யாழ்பாணாத்திற்கு திரும்பியுள்ளனர். மாயாவின் இளமைக்காலம் அங்குள்ள போர்ச் சூழலில் கழிகின்றது, தந்தையார் ஈழப் போராட்டத்தில் ஈடுபாடுகொண்டு இலங்கையில் தங்கிவிட மாயாவின் தாயார் தனது பிள்ளைகளுடன் தமிழ்நாடு சென்று பின்னர் அங்கிருந்து பிரித்தானியா சென்று அரசியல் தஞ்சம் கோரி அகதி அந்தஸ்துடன் பிள்ளைகைளை வளர்த்து வருகின்றார். லண்டனில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் ஒரு பகுதியான டூட்டிங் பகுதியில் வாழ்ந்தனர். மாயா லண்டனிலுள்ள பல்கலைக்கழகமான Central Stint Martinல் பாஷன் மற்றும் சினிமா (Fassion and Flim) துறையில் பட்டம் பெற்றார். தனது முதலாவது அல்பமான அருளர் என்ற music அல்பத்தை 2005 லும் கலாஎன்ற music அல்பத்தை 2007ல் அவர் வெளியிட்டார்.

« PREV
NEXT »

No comments