Latest News

May 19, 2016

மண்ணில் புதையுண்ட 3 கிராமங்கள்
by admin - 0

கேகாலை மாவட்­டத்தின் அர­நா­யக்க மற்றும் புளத் ­கொ­ஹு­பிட்­டிய ஆகிய பிர­தே­சங்­களில் நேற்று முன்­தினம் இரவு இடம்­பெற்ற பாரிய மண்­ச­ரிவில் சிக்­கி உயி­ரி­ழந்த 20 பேரது சட­லங்கள் நேற்று மாலை­வரை மீட்­கப்­பட்­டுள்­ளன.
அத்­துடன் இரண்டு பிர­தே­சங்­க­ளிலும் மேலும் குழந்தைகள் மற்றும் சிறு­வர்கள் உள்­ளிட்ட 134 க்கும் மேற்­பட்டோர் காணாமல்போயி­ருக்­கலாம் என்றும் அவர்­களும் மண்­ணுக்குள் புதைந்து உயி­ரி­ழந்­தி­ருக்­கலாம் எனவும் அஞ்­சப்­ப­டு­கின்­றது.

அந்­த­வ­கையில் அர­நா­யக்க சிரி­புர எலங்­க­பிட்­டிய மற்றும் பல்­லே­பாகே ஆகிய மூன்று கிரா­மங்­க­ளிலிம் ஏற்­பட்ட மண்­ச­ரி­வினால் உயி­ரி­ழந்த 17 பேரின் சட­லங்­களும் புலத்­கொ­ஹு­பிட்­டிய பகு­தியில் ஏற்­பட்ட மண­ச­ரிவில் சிக்­கிய 16 பேரில் மூன்று பேரின் சட­லங்­களும் மீட்­கப்­பட்­டுள்­ளன.

அர­நா­யக்க பகு­தியில் ஏற்­பட்ட மண்­ச­ரிவில் 66 வீடுகள் முற்­றாக மண்ணில் புதை­யுண்­டுள்­ளன. மேலும் காணாமல் போன­தாக கூறப்­பட்ட நிலையில் அவர்­களில் நேற்­றுக்­காலை 150 பேர் பாது­காப்­பாக மீட்­கப்­பட்­டனர்.

அர­நா­யக்க

மாவ­னெல்ல அர­நா­யக்க பகு­தியில் நேற்­று­முன்­தினம் மாலை ஏற்­பட்ட பாரிய மண்­ச­ரிவில் மூன்று கிரா­மங்­களின் 220 க்கும் மேற்­பட்ட வீடுகள் சேத­ம­டைந்­த­துடன் மண்­ச­ரிவில் சிக்­கிய 1100 க்கும் மேற்­பட்டோர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.
சிரி­புர எலங்­க­பிட்­டிய மற்றும் பல்­லே­பாகே ஆகிய கிரா­மங்­களே இவ்­வாறு மண்­ச­ரி­வினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. சாம­புர என்ற மலை­யி­லி­ருந்து இவ்­வாறு மூன்று கிரா­மங்­களின் மீது மண்­ச­ரிவு ஏற்­பட்­டுள்­ளது.
இந்­நி­லையில் பாது­காப்­பாக மீட்­கப்­பட்ட 1100 க்கும் மேற்­பட்டோர் ஆறு தற்­கா­லிக முகாம்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர். எலங்­க­பிட்­டிய மலை உச்­சியில் அமைந்­துள்ள விஹா­ரையே முதலில் இந்த மண்­ச­ரி­வினால் மண்ணுள் புதை­யுண்­ட­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
இந்­நி­லையில் அர­நா­யக்க பகு­தியில் நேற்று இரவு முழு­வதும் தொடர்ச்­சி­யாக மழை பெய்­து­கொண்­டி­ருந்­த­மை­யினால் மீட்பு பணியில் ஈடு­பட்டோர் பாரிய சிர­மங்­களை எதிர்­கொண்­டனர். கேகாலை இரா­ணுவ முகா­மி­லுள்ள 260 க்கும் மேற்­பட்ட படை­யினர் மேஜர் ஜெனரல் காவிந்த குண­வர்த்­தன தலை­மையில் மீட்பு பணி­களில் ஈடு­பட்­டு­வ­ரு­கின்­றனர்.
இதே­வேளை அர­நா­யக்க மண்­ச­ரி­வினால் காணாமல் போன­வர்­களை மீட்கும் பணிகள் தொடர்ந்து இடம்­பெற்­று­வ­ரு­வ­தாக இடர் முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது. நேற்­றைய தினமும் இப்­ப­கு­தியில் கடும் மழை பெய்­வதால் மீட்பு பணி­யா­ளர்­க­ளுக்கு அங்கு செல்­வ­தி­லேயே சிர­மங்­களை எதிர்­நோக்­கி­யி­ருந்­தனர். எனினும் பல்­வேறு சிர­மங்­க­ளுக்கு மத்­தியில் இரா­ணு­வத்­தினர் அப்­ப­கு­தியில் மீட்புப் பணி­களை மேற்­கொண்­டுள்­ளனர். மேலும் சட­லங்கள் மீட்­கப்­ப­டலாம் என அஞ்­சப்­ப­டு­கின்­றது.
அத்­துடன் நேற்­றைய அர­நா­யக்க பிர­தே­சமே சோக­ம­ய­மாகி காணப்­பட்­டது. அருகில் உள்ள பிர­தேச மக்­களும் மண்­ச­ரிவு ஏற்­பட்ட பகு­தி­க­ளுக்கு வருகை தந்­த­மை­யினால் மீட்பு பணி­க­ளுக்கு இடை­யூறு நேற்­றைய தினம் ஏற்­பட்­டி­ருந்­தது. தொடர்ந்தும் சாம­புர மலை­யி­ருந்து நீர் மற்றும் கற்­களும் மண் திட்­டு­களும் வந்­து­கொண்­டி­ருப்­பதால் மீட்பு பணிகள் கடும் சவா­லுக்கு உட்­பட்­டுள்­ளன.

இதே­வேளை விமானப் படை­யினர் நேற்­றைய தினம் குறித்த பிர­தே­சத்தை ஹெலி­கப்டர் மூலம் கண்­கா­ணித்­தி­ருந்த நிலை­யி­லேயே மீட்பு பணிகள் இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன. நேற்றுக் காலை 6.00 மணி முதல் மண்­ச­ரிவு ஏற்­பட்ட பிர­தே­சங்­களை கண்­கா­னிக்கும் பணி­களில் பெல் 212 என்ற ஹெலி­கப்டர் ஈடு­பட்­டுள்­ளது.


புளத்­கொ­ஹு­பிட்­டிய

இது இவ்­வாறு இருக்க கேகாலை புலத்­கொ­ஹு­பிட்­டிய, களு­ப­ஹ­ன­வத்த தோட்­டத்தில் ஏற்­பட்ட மண்­ச­ரிவில் சிக்கி உயி­ரி­ழந்த 3 பேரின் உடல்கள் மீட்­கப்­பட்­டுள்­ளன. மொத்­த­மாக 17 பேர் இந்த மண்­ச­ரி­வின்­போது மண்ணில் புதை­யுண்­டு­போன நிலையில் மூவரே சட­லங்­க­ளாக மீட்­கப்­பட்­டுள்­ளனர். ஏனைய 14 பேரும் உயி­ரி­ழந்­தி­ருக்­கலாம் என அஞ்­சப்­ப­டு­கின்­றது.

அத்­துடன் காணாமல் போயுள்ள ஏனை­ய­வர்­களை தேடும் பணிகள் தொடர்ந்து இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன. 50 க்கும் மேற்­பட்ட இரா­ணுவ அதி­கா­ரிகள் பிரி­கே­டியர் பி.ஜே. கமகே தலை­மையில் மீட்பு பணி­களில் ஈடு­பட்­டுள்­ளனர்.
இப்­பி­ர­தே­சத்தில் ஏற்­பட்ட மண்­ச­ரிவில் தோட்ட குடி­யி­ருப்பு தொகுதி ஒன்றே மண்ணில் புதைந்­துள்­ளது. 6 குடி­யி­ருப்­புக்கள் ( லயன்கள்) இவ்­வாறு மண்­ணுக்குள் புதைந்­துள்­ளது. ,


இதே­வேளை இந்த மண்­ச­ரிவு அனர்த்­தங்கள் தொடர்பில் இரா­ணுவ பேச்­சாளர் பிரி­கே­டியர் ஜயநாத் ஜய­வீர கருத்து வெளி­யி­டு­கையில்

மண்­ச­ரிவைப் பொறுத்­த­வ­ரையில் அர­நா­யக்க, அத்­கம்­பளை, சிறி­புர என்ற பிர­தே­சங்­களும், புலத்­கொவ்­பிட்­டிய என்ற பிர­சேத்­திலும் பாரிய மண்­ச­ரி­வுகள் இடம்­பெற்­றுள்­ளன. அந்த வகையில் அர­நா­யக்­கப்­ப­கு­தியில் மீட்புப் பணி­களை மேற்­கொள்ள 15 அதி­கா­ரிகள் உட்­பட 266 இரா­ணு­வத்­தினர் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். புலத்­கொவ்­பிட்­டிய பிர­த­சேத்தில் மீட்­புப்­ப­ணி­களை மேற்­கொள்ள ஐந்து அதி­கா­ரிகள் உட்­பட 50 இரா­ணு­வத்­தினர் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். நேற்று முன்­தினம் இரவு அர­நா­யக்­கப்­ப­கு­தியில் மண்­ச­ரிவு ஏற்­பட்­ட­வுடன் 80 இரா­ணு­வத்­தினர் உட­ன­டி­யாக ஸ்தலத்­திற்கு அனுப்­பப்­பட்டு மீட்­புப்­ப­ணிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. கமான்டோ பிரிவு அதி­கா­ரி­களும் மீட்­டுப்­ப­ணியில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டனர். முதற்­கட்­ட­மாக அர­நா­யக்­கப்­ப­கு­தி­யி­லி­ருந்து 150 பேர் பாது­காப்­பாக மீட்­கப்­பட்டு 6தற்­கா­லிக முகாம்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர்.
ஹெலி­கொப்டர் மூலம் இந்­தப்­ப­கு­தி­களில் அனர்த்த நிலை­மைகள் நேற்­றுக்­காலை கண்­கா­ணிக்­கப்­பட்­டன. அர­நா­யக்­கவில் 7 சட­லங்­க­ளையும், புலத்­கொவ்­பிட்­டி­யவில் 3 சட­லங்­க­ளையும் இரா­ணு­வத்­தினர் மீட்­டுள்­ளனர். தொடர்ந்தும் மீட்புப் பணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. மண்­ச­ரிவு ஏற்­பட்ட பகு­தி­களில் அதி­க­ளவு வீடுகள் சேத­ம­டைந்­துள்­ளன. எவ்­வா­றெ­னினும் அனைத்­துப்­ப­கு­தி­க­ளிலும் 700க்கும் மேற்­பட்ட இரா­ணு­வத்­தினர் மீட்­புப்­ப­ணி­களில் ஈடு­பட்­டுள்­ளனர் என்றார்.

அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் ராஜித சேனா­ரட்ன இது தொடர்பில் தகவல் வெளியிடுகையில்
அரநாயக்க மண்சரிவு சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிடுகையில் அரநாயக்க சம்பவத்தை அடுத்து அங்கு 20 அம்புலன்ஸுகள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும் 15 டாக்டர்களும், 45 தாதியர்களும் அரநாயக்கப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். வரக்காப்பொல, கேகாலை மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றார்.

இதற்கிடையில் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்த நிலைமைகள் குறையவில்லை என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.

இது இவ்வாறு இருக்க இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் வாழும் மக்கள் இன்னும் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments